பொதுவாகவே தமிழக மக்கள் ஆடி மாதத்தை அம்மன்   கொண்டாடுகிறார்கள். இந்தியாவில் உள்ள அனைத்து நதிகளுக்கும் பெண்கள் பெயரே வைக்கப்பட்டு இருக்கிறது. அதிலும் குறிப்பாக இங்கு கொண்டாடப்படும் பண்டிகைகள் பெண்களை முக்கியமாக வைத்து தான் கொண்டாடப்படுகிறது.  தமிழர்கள் தண்ணீரை தாயாகவே வழிபடுபவர்கள். அதனால் தான் “தாயை பழித்தாலும், தண்ணீரை பழிக்காதே” என்று சொல்வார்கள். அந்த அளவிற்கு தண்ணீரை தெய்வமாக பார்க்கும் தமிழர்களால்  கொண்டாடப்படும் மிக முக்கியமான பண்டிகை ஆடி 18 என்று சொல்லப்படும் ஆடி பெருக்கு.

அகத்தியரும் காவிரியும்:

காவிரி நதியின் பிறப்பிடமாக கருதப்படும் தலைக்காவிரி பாகமண்டலாவில் உள்ள பிரம்மகிரி மலைப்பகுதியில் இருந்து உருவாகிறது.  இங்கு காவிரியும், கன்னிகா நதியும், கண்ணுக்கு தெரியாத ஜோதி நதியும் சங்கமிப்பதால் இது ‘திரிவேணி சங்கமம்’ என்றும் அழைக்கப்படுகிறது.

கவேரர் என்ற முனிவர் தனக்கு ஒரு பெண் குழந்தை வேண்டுமென்று பிரம்மனிடம் வேண்டி தவமிருந்தாராம். அவரது தவத்தை ஏற்ற பிரம்மன், கவேர முனிவரின் முன் தோன்றி அவர் வேண்டியபடியே ஒரு பெண் குழந்தையை அருளினாராம். பிறகு “முன்பு நான் தவம் செய்த போது விஷ்ணு  பகவான் அருளால் எனக்கு புத்திரியாக இவள் தோன்றினாள். பெண் உருவம், நதி உருவம் என இரண்டு உருவங்கள் கொண்ட இவளை உனக்கு வரமாக தருகிறேன்” என்று கூறி மறைந்தாராம். முனிவர் அவளுக்கு லோபமுத்திரை என்று பெயர் சூட்டி வளர்த்தார்.
சிவ பக்தையான லோபமுத்திரை சிவனை நோக்கி தவம் இருக்க அவளுடைய தவத்தில் மனம் மகிழ்ந்த சிவபெருமான் அவள் வேண்டிய வரத்தை தருகிறார். அதாவது நதியாக மாற வேண்டும் என்றும், அகத்தியரை திருமணம் புரிய வேண்டும் என்பது அவளுடைய வேண்டுதலாக இருக்க ; அதை தந்து அருளினார் சிவன். அகத்தியரும் லோபமுத்திரையை மணந்து கொண்டு அவளுடைய நதி ரூபத்தை தன்னுடைய கமண்டலத்தில் வைத்துக் கொண்டார்.

ஆடிப்பெருக்கின் சிறப்புக்கள்.!! | Newlanka

லோபமுத்திரை காவேரியாக உரு எடுக்கும் நாள் வந்ததும் ,தேவர்கள் எல்லோரும் முறையிடவே விநாயகர் காக்கை வடிவில் வந்து அவருடைய கமண்டலத்தை தட்டி விடுகிறார். கமண்டலத்தில் இருந்த காவிரி தாய் பொங்கி பிரவாகமெடுத்து ஓடுகிறாள். ஒவ்வொரு மக்களும் தங்கள் பாவங்களை போக்கி கொள்ள கங்கையில் நீராடுவார்கள். பகவான் விஷ்ணுவின் சொல்படி அந்த பாவங்களை போக்கி கொள்ளவே கங்கை ; காவிரியில் நீராடுகிறாள்.இதனால் மனம் மகிழ்ந்த காவிரி விஷ்ணுவை காணவே ஸ்ரீரங்கத்தில் பொங்கி வருகிறாள். கங்கையை விட சிறப்பு பெற்ற காவிரிக்கு பெண்கள் விழா எடுக்கும் நாளே ஆடி பெருக்கு.

ஒவ்வோர் ஆண்டும்  ஆடி மாதம் 18 அன்று , காவிரி நதிக் கரையோரம், திருச்சி திருவரங்கம் அம்மா மண்டபம் படித்துறை, முக்கொம்பு படித்துறை மற்றும் அங்குள்ள 3 படித்துறைகளில், சுமங்கலிப் பெண்கள், புதிதாக திருமணமான பெண்கள், திருமணமாகாத கன்னிப் பெண்கள், தங்கள் குடும்பத்துடன் சென்று பூசைகள் செய்து, தங்களின் குடும்ப நலனுக்காக காவிரித்தாயை வணங்குவர்.

பூசைக்காக, மலர் மாலை, ஊதுபத்தி, சாம்பிராணி, மஞ்சள், குங்குமம், தேங்காய், வெற்றிலை பாக்கு, பழங்கள், வெல்லம், மஞ்சள் கயிறு, கற்பூரம், விபூதி, சந்தனம், நாணயங்கள், நறுமணப் பூக்கள், தேன், பச்சரிசி மாவு, பன்னீர், வாழை இலை போன்றவற்றைக் கொண்டு சென்று, அவல் , ஊறவைத்த இனிப்பு கலந்த பச்சரிசி ஆகியவற்றை காவிரித்தாய்க்குப் படைத்து பண்டிகையாகக் கொண்டாடுவது வழக்கம்.

மேலும் மங்கள பொருட்களான தாலிக்கயிறு,பூ, வளையல், வெற்றிலை-பாக்கு , வாழைப்பழம், மஞ்சள், குங்குமம் ஆகியவற்றை ஒரு வாழை இலையில் வைத்து விளக்கு ஏற்றி ஆற்றில் விடுவர். அதாவது காவிரி தாய் இந்த மாதம் கருவுற்று இருப்பதாக ஐதீகம் . அதை கொண்டாடடும் வகையில் ஸ்ரீ அரங்கநாதன் தன்னுடைய தங்கைக்கு சீர் செய்கிறார். அந்த வகையிலேயே அன்றைய தினம் பெண்கள் இதை செய்கிறார்கள்.  இந்த பண்டிகை ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் சிறப்பாக கொண்டப்படுகிறது.  

வீட்டில் பெண்கள் சித்ரான்னம் செய்து தங்கள் குடுமபத்துடன் காவிரி கரையில் , காவிரி தாய்க்கு படையல் இட்டு வணங்குவார்கள்.

விழா சிறப்புகள்:

“ஆடி பட்டம் தேடி விதை” என்று சொல்வார்கள். தங்களுடைய நடவு காலங்களில் பயிர்களுக்கு எந்த சேதாரமும் வராமல் காக்க ஆற்று நீரை வணங்கி ஆடி மாதம் 18 அன்று விதை விதைக்க தொடங்குவார்கள். பொங்கி வரும் புது புனலில் விதை விதைப்பதால் தை மாதம் நல்லபடியாக அறுவடை செய்ய முடியும். அதனாலேயே உழவர்கள் ஆடி 18 அன்று ஆறுகளுக்கு படையலிட்டு  நடவு தொடங்குவார்கள். நெல், கரும்பு போன்ற பயிர்களை அன்றைய தினம் விதைப்பார்கள்.

aadi perukku 2020: ஆடி பெருக்கு 2020 சிறப்புகளும், வழிபட வேண்டிய அவசியம்  என்ன? - significance of aadi 18 and how to celebrate aadi perukku | Samayam  Tamil


அன்றைய தினம் விரதம் இருந்து வழிபடும் கன்னி பெண்களுக்கு நல்ல மனம் விரும்பிய வண்ணம் கணவர் வாய்ப்பார்.  திருமணமான புதுமண தம்பதிகளுக்கு மூத்த சுமங்கலி பெண்கள் தங்கள் கைகளால் திருமாங்கல்யக் கயிறு மாற்றி விடுவது வழக்கம்.இப்படி மாற்றிக் கொள்வதால்  தங்களுடைய கணவருக்கு நோய் நொடியில்லாத நீண்ட ஆயுள் அமையும் என்பது திண்ணம். அனைத்து வயது பெண்களும் அன்று காவிரி தாய்க்கு முளைப்பாரி எடுத்து வழிபடுவார்கள்.

 குழந்தை பேறு  இல்லாத தம்பதிகள் விரதமிருந்து வழிபட்டால் புத்திர பாக்கியம் கிடைக்கும் என்பது நிச்சயம்.

 அன்றைய தினம் காவேரி  நம்முடைய இல்லத்து  நீரில் வசிக்கிறாள். அதனால் ஒரு சொம்பில் நீரை பிடித்து அதில் மஞ்சள் மற்றும் மங்கள பொருட்களை இட்டு காவிரியை வழிபட நம்முடைய பாவங்கள் நீங்கும் என்பது ஐதீகம். வீட்டில் கிணறு இருப்பவர்கள் அந்த கிணற்றுக்கு மஞ்சள் பூசி குங்குமம் இட்டு பூ வைத்து, பூஜைகள் செய்ய அந்த காவிரியை வழிபட்டதாக ஐதீகம்.

All India Radio News on Twitter: "#TamilNadu: People performs Aadi Perukku  festival puja in #Theni. #AIRPics: Bhaskaran… "

வீட்டிற்கு சுமங்கலி பெண்களை அழைத்து வெற்றிலை பாக்கு மற்றும் நிவேதனம் தந்து வழியனுப்ப வீட்டில் செல்வம் மற்றும் அனைத்து வளங்களும் சேரும்.

ஆடி பெருக்கு அன்று செய்யும் எதை தொழிலும் வளரும். அதனாலேயே அன்று தங்கம் மற்றும் வெள்ளி போன்ற விலையுயர்ந்த  பொருட்களை வாங்கும் வழக்கம் இருந்தது. அன்றைய தினம் மங்கள பொருட்களான மஞ்சள், கல் உப்பு போன்ற பொருட்களையும் வாங்கலாம்.

ஆடி பெருக்கில் செய்யும் எந்த ஒரு புண்ணிய தரும விஷயங்களும் பெருகும். அன்றைய தினம் அன்னதானம் செய்வது நன்று.

வாழ்க்கை வளமாக ஆடி பெருக்கில் அம்மனை வணங்குவோம் ஐஸ்வர்யங்களை பெறுவோம்.

குருவே துணை.
நன்றி,
” ஜோதிட கலாவாணி “ஆஸ்ட்ரோலக்ஷ்மி BSc., B.A Astrology,
ஜோதிடம் மற்றும் ப்ரஸ்னம் ஆலோசனை பெற
தொடர்புக்கு : 9514430898
astrolakshmi2019@gmail.com

Follow Us @ Astrolakshmi

Instagram  : https://bit.ly/3BH2Y3o

Face book : https://bit.ly/2UGwGoN

Youtube     : https://bit.ly/3l1auQO

Koo            : https://bit.ly/3zD9LcQ

Twitter       : https://bit.ly/3eVvrJ4

..
..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here