ஆப்பிள் நிறுவனத்தின் ஐ.ஓ.எஸ். 12.1 அப்டேட் சார்ந்த விவரங்களில் புதிய ஐபோன்களில் வழங்கப்பட இருக்கும் அம்சங்கள் சார்ந்த விவரங்கள் வெளியாகியுள்ளது. #iPhoneXS

ஆப்பிள் நிறுவனம் ஐ.ஓ.எஸ். 12.1 இயங்குதளத்திற்கான ஐபோன் யூசர் கைடை அப்டேட் செய்திருக்கிறது. புதிய ஐ.ஓ.எஸ். அப்டேட் மூலம் ஆப்பிள் நிறுவனம் ஐ.ஓ.எஸ். 12 இயங்குதளத்தில் வழங்க இருந்த அம்சங்களை வழங்குகிறது.

அந்த வகையில் புதிய இயங்குதளத்தின் மிகமுக்கிய அம்சங்களாக க்ரூப் ஃபேஸ் டைம் மற்றும் டூயல் சிம் வசதி உள்ளிட்டவை இருக்கின்றன. க்ரூப் ஃபேஸ்டைம் அம்சம் அதன் பெருக்கு ஏற்றார்போல் ஒரே சமயத்தில் அதிகபட்சம் 32 பேருடன் வீடியோ கால் பேச வழி செய்யும்.

க்ரூப் ஃபேஸ் டைம் வசதியுடன் புதிய ஐபோன் மாடல்களுக்கான டூயல் சிம் வசதியும் வழங்கப்படுகிறது. அந்த வகையில் ஐபோன் “XR”, “XS” மற்றும் “XS மேக்ஸ்” உள்ளிட்ட மாடல்களுக்கு டூயல் சிம் வசதி வழங்கப்பட இருக்கிறது. இவை ஐ.ஓ.எஸ். பாயின்ட் அப்டேட்கள் வரும் போது கிடைக்கும்.

புதிய அப்டேட் மூலம் ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் உள்ளதை போன்றே ஆப்பிள் புதிய ஐபோன்களில் டூயல் சிம் வசதி மூலம் பயனர்கள் இரண்டு செல்லுலார் சேவைகளை பயன்படுத்த முடியும். ஆப்பிள் ஐபோன்களில் டூயல் சிம் வசதிக்கென அந்நிறுவனம் டூயல் சிம் டூயல் ஸ்டான்ட்பை தொழில்நுட்பத்தின் மூலம் வழங்குகிறது. 

இந்த தொழில்நுட்பம் புதிய ஐபோனில் ஒற்றை சிம் ஸ்லாட் மற்றொன்றில் எம்பெட் செய்யப்பட்ட இசிம் வழங்கப்பட்டுள்ளது. சீனாவில் வெளியாகும் ஐபோன்களில் மட்டுமே இரண்டு சிம் ஸ்லாட் வழங்கப்பட்டுள்ளது.

ஐ.ஓ.எஸ். 12.1 இயங்குதளத்தின் வெளியீட்டு தேதி குறித்து ஆப்பிள் சார்பில் எவ்வி தகவலும் வழங்கப்படவில்லை, எனினும் இதன் பீட்டா பதிப்புகள் செப்டம்பர் மாதம் முதல் சோதனை செய்யப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here