ஆப்பிள் நிறுவனம் அடுத்த மாதம் அறிமுகப்படுத்த இருக்கும் ஐபோன், இரண்டு சிம்களை பயன்படுத்தக் கூடியதாக இருக்கும் என்று கூறப்படுகிறது. ஐ.ஓஎஸ்12 கோடிலும், அதற்கான சாத்தியங்கள் தெரிந்ததாகவும் கூறப்படுகிறது.
மூன்று ஐபோன்களை வெளியிட இருப்பதாகவும் தகவல்கள் பரப்பப்படுகின்றன. அதில் ஒன்று 6.1 இன்ச் எல்.சி.டி டிஸ்பிளேவும், 5.8 மற்றும் 6.5 இன்ச் ஓ.எல்.இ.டி டிஸ்பிளேவும் கொண்ட இரண்டும் இருக்கும் என்றும் ஆன்லைனில் கசிந்த தகவல்கள் கூறுகின்றன. இந்த மூன்றில் ஒன்றில் மட்டும் இரண்டு சிம்கள் போடும் வகையில் இருக்கும் என்றும், அதுவும் குறிப்பிட்ட ஒரு சந்தைக்கு மட்டுமே அறிமுகமாக இருப்பதகாவும் தகவல் கிடைத்துள்ளது.
தாய்வான் யுனைட்டெட் என்ற செய்தி நிறுவனம், 6.1 இன்ச் எல்.சி.டி ஐபோனில் தான் டூயல் சிம் ஸ்லாட் இருக்கும் என்கிறது. இதுதான் ஐபோனின் மிக விலைக் குறைந்த மொபைலாக இருக்கும். மேலும், இது பிரத்யேகமாக சீன சந்தையில் மட்டுமே அறிமுகமாகிறது என்றும் கூறியிருந்தது. எனவே இந்தியாவில் இந்த ஐபோன் விற்பனைக்கு வராது என்று புரிந்து கொள்ளலாம்.
டூயல் சிம் ஸ்மார்ட்ஃபோன்களை பல நிறுவனங்கள் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வருவதால், புதிய டூயல் சிம் ஐபோன் இந்தியாவில் தாமதமாக அல்லது சீனாவுக்கு அடுத்தபடியாக கொண்டு வரப்படலாம் என்று கருதப்படுகிறது.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்