ஆப்பிள் நிறுவனம் இந்த ஆண்டின் முதல் பாதியில் ஐபேட் மினி 5 மற்றும் புதிய என்ட்ரி லெவல் ஐபேட் மாடல் ஒன்றையும் அறிமுகம் செய்யும் என தகவல் கசிந்துள்ளது.

செப்டம்பர் 2015 இல் அறிமுகம் செய்யப்பட்ட ஐபேட் மினி 4 மாடலின் அப்கிரேட் செய்யப்பட்ட டேப்லெட் எப்போது என நீண்ட காலமாக எதிர்பார்க்கப்படுகிறது. ஐபேட் மினி 5 டேப்லெட் மட்டுமின்றி ஆப்பிள் நிறுவனம் என்ட்ரி லெவல் ஐபேட் மாடல் ஒன்றையும் இந்த ஆண்டு அறிமுகம் செய்யலாம் என நம்பப்படுகிறது.

புதிய ஐபேட் மாடல்களின் சிறப்பம்சங்கள் பற்றிய தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. இருப்பினும், ஏற்கனவே கசிந்த தகவல்களில் ஐபேட் மினி 5 மாடலில் செங்குத்தாக பொருத்தப்பட்ட டூயல் பிரைமரி கேமரா செட்டப் மற்றும் ஹெட்போன் ஜாக் உள்ளிட்டவை வழங்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

கடந்த ஆண்டு வெளியியான தகவல்களில் புதிய ஐபேட் மினி 5 டேப்லெட் 2019 கோடை காலத்தில் அறிமுகமாகலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த டேப்லெட்டில் முந்தைய ஐபேட் மினி மாடலை விட மேம்பட்ட பிராசஸர் மற்றும் சற்றே குறைந்த விலையிலான டிஸ்ப்ளே பேனல் வழங்கப்படலாம் எனவும் தெரிகிறது.

முன்னதாக 2015 செப்டம்பரில் ஆப்பிள் வெளியிட்ட ஐபேட் மினி் மாடலில் 7.9 இன்ச் 2048×1536 பிக்சல் டிஸ்ப்ளே மற்றும் இரண்டாம் தலைமுறை ஏ8 சிப்செட் வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் வெளியான தகவல்களில் 9.7 இன்ச் ஐபேட் (2018) மாடலின் அப்டேட் மாடல், 10 இன்ச் அளவில் அறிமுகமாகும் என்றும் இத்துடன் குறைந்த விலையில் ஐபேட் மாடல் ஒன்றும் அறிமுகமாகும் என தெரிவிக்கப்பட்டது.

புதிய ஐபேட் அறிமுகம் செய்வது பற்றி ஆப்பிள் இதுவரை எவ்வித தகவலும் வழங்கவில்லை.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்