ஐபிஎல்2020: ரசிகர்களிடையே வரவேற்பை பெற்ற டிவிட்டர் ஈமோஜிகள்

Through these nine emojis fans will be able to show instant support to their favourite team. Fans will also be able to follow and participate in live conversations.

0
146

ஐபிஎல் 2020 கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய், அபு தாபி, ஷார்ஜாவில் நடக்கிறது. வருகிற 19 ஆம் தேதி போட்டி தொடங்குகிறது.

முதல் போட்டியில் சென்னை – மும்பை அணிகள் மோதுகின்றன.

ஐ.பி.எல் போட்டிகளின்போது டிவிட்டர் டைம்லைனிலிருக்கும் க்ரௌட் லைவ்வின் மூலம் நீங்கள் அனைவரும் ஒரு இடத்தில் உட்கார்ந்து போட்டியைப் பார்ப்பது போல் உணர முடியும்.

கொரோனோ அச்சுறுத்தலால் இந்த ஆண்டு அரங்கத்தில் அமர்ந்து பார்வையாளர்கள் போட்டிகளை பார்க்க அனுமதி கிடையாது. எனவே இந்த ஆண்டு வீட்டிலிருந்து பார்வையாளர்கள் கிரிக்கெட் விளையாட்டை பார்க்க டிவிட்டர் ஏற்பாடு செய்துள்ளது.

எமோஜிகள் மூலம் உற்சாகத்தை அதிகரிக்க டிவிட்டர் சிறப்பு குழு ஈமோஜிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இது ஆங்கிலம் மற்றும் ஆறு இந்திய மொழிகளில் ஹேஷ்டேக்குகளாக வெளியிடப்பட்டுள்ளது.

அனைத்துஅணி எமோஜிகள் ஹேஷ்டேக்குகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது: #OneFamily,#WhistlePodu, #PlayBold, #KorboLorboJeetbo, #SaddaPunjab, #OrangeArmy,#HallaBol, மற்றும் #YehHaiNayiDilli.

இந்த ஒன்பது எமோஜிகள் மூலம் ரசிகர்கள் தங்களுக்கு பிடித்த அணிக்கு உடனடி ஆதரவைக் கொடுக்க முடியும். ரசிகர்கள் நேரடி உரையாடல்களை பின்பற்றவும், பங்கேற்கவும் முடியும்.

மேலும் புதுப்பிப்புகளுக்கு காத்திருக்க மற்றும் தொடக்க விளையாட்டு #MIvCSK ஐ எமோஜிகள் மூலம் ஆதரவு தெரிவிக்கலாம். இந்த ஈமோஜிகள் தற்போது ஐபிஎல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. பலரும் எமோஜிகள் மூலம் தங்கள் விருப்ப அணிக்கு ஆதரவான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

(இந்தக் கட்டுரை பல்வேறு தரவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது.)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here