ஐபிஎல் 2020: 35-ஆவது லீக் போட்டி விபரம்

Sunrisers Hyderabad will face Kolkata Knight Riders in the first game on Sunday.

0
90

13-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த 19 ஆம் தேதி தொடங்கி நவம்பர் 10 ஆம் தேதி வரை நடக்கிறது.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 33-ஆவது லீக் ஆட்டத்தில் பெங்களூா் ராயல் சேலஞ்சா்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை தோற்கடித்தது.

இந்த சீசனில் இதுவரை 9 ஆட்டங்களில் விளையாடியுள்ள பெங்களூா் அணி 6-ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 34-ஆவது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பா் கிங்ஸ் அணியை தோற்கடித்தது.

இந்த சீசனில் இதுவரை 9 ஆட்டங்களில் விளையாடியுள்ள டெல்லி அணி 7-ஆவது வெற்றியைப் பெற்று 14 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 35-ஆவது லீக் ஆட்டத்தில் சன்ரைஸா்ஸ் ஹைதராபாத் – கொல்கத்தா நைட் ரைடா்ஸ் அணிகள் மோதுகின்றன.

இவ்விரு அணிகளும் இதுவரை 18 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அவற்றில் ஹைதராபாத் அணி ‌7 ‌போட்டிகளிலும், கொல்கத்தா அணி 11 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன‌. ‌

இந்தப் போட்டி இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார்ஸ் போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here