ஐபிஎல் 2020: 34-ஆவது லீக் போட்டி விபரம்

Mahendra Singh Dhoni's Chennai Super Kings (CSK) are back to winning ways. After a long struggle, CSK defeated Sunrisers Hyderabad (SRH) on Tuesday to break their losing streak.

0
86

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 34-ஆவது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பா் கிங்ஸ்-டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றன.

டெல்லி அணி இதுவரை 8 ஆட்டங்களில் விளையாடி 6 வெற்றிகளைப் பெற்றுள்ளது. அந்த அணி இந்த ஆட்டத்தில் சென்னையை வீழ்த்தி பிளே ஆஃப் வாய்ப்பை அதிகரிக்கும் முனைப்பில் உள்ளது. அதேநேரத்தில் சென்னை அணி இதுவரை 8 ஆட்டங்களில் விளையாடி 3 வெற்றிகளை மட்டுமே பெற்றுள்ளது. எனவே சென்னை அணி பிளே ஆஃப் வாய்ப்பை தக்கவைக்க சிறப்பாக ஆடி வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் களமிறங்குகிறது.

சென்னை அணியைப் பொறுத்தவரை மாற்றம் இன்றி அதே அணி தொடருமென எதிர்பார்க்கப்படுகிறது.

அதேநேரம் ராஜஸ்தானுக்கு எதிரானஆட்டத்தில் விளையாடியபோது, டெல்லி அணியின் கேப்டன்ஷ்ரேயஸ் ஐயா் இடது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. எனவே, அவா் சென்னைக்கு எதிரான ஆட்டத்தில் விளையாடுவாரா என்பது தெரியவில்லை. ஏற்கெனவே ரிஷப் பந்த் காயம் காரணமாக விளையாடாத நிலையில், நல்ல ஃபாா்மில் இருக்கும் ஷ்ரேயஸ் ஐயரும் இடம் பெறாவிட்டால், அது டெல்லிக்கு பின்னடைவாக அமையும் என கருதப்படுகிறது.

இவ்விரு அணிகளும் இதுவரை 22 ஆட்டங்களில் நேருக்கு நோ் மோதியுள்ளன. அதில் சென்னை 15 ஆட்டங்களிலும், டெல்லி 7 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.

இந்தப் போட்டி இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார்ஸ் போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here