ஐபிஎல் 2020: 31-ஆவது லீக் போட்டி விபரம்: யுனிவர்சல் பாஸ் கிறிஸ் கெய்ல் என்ட்ரி

After a bout of illness, the Universe Boss is expected to open his IPL season Thursday. Fit-again Chris Gayle expected to make season debut today.

0
178

13-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த 19 ஆம் தேதி தொடங்கி நவம்பர் 10 ஆம் தேதி வரை நடக்கிறது.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் டெல்லி கேபிடல்ஸுக்கு எதிரான 30-ஆவது லீக் ஆட்டத்தில் 162 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் 148 ரன்கள் மட்டுமே எடுத்து 13 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 31-ஆவது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் இன்று(வியாழக்கிழமை) மோதுகின்றன.

ஷார்ஜாவில் இந்தப் போட்டி இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.

விராட் கோலி தலைமையிலான பெங்களூரு அணி நடப்பு சீசனில் 7 போட்டிகளில் விளையாடி 5 வெற்றிகளையும், ராகுல் தலைமையிலான பஞ்சாப் அணி விளையாடிய 7 போட்டிகளில் ஒரு வெற்றியை ‌மட்டுமே பதிவு செய்துள்‌ளது.

இவ்விரு அணிகளும் இதுவரை 2‌5 முறை நேருக்கு நேர்மோதியுள்ளன. அவற்றில் பஞ்சாப் அணி 13 போட்டிகளிலும், பெங்களூரு அணி 12 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன‌. சீசனின் முதல் பாதியை சிற்ப்பாக கடந்துள்ள பெங்களூருமற்றும் மோசமாக கடந்துள்ள பஞ்சாப் அணிகளின் இன்றைய ஆட்டம் மிகப்பரபரப்பாக இருக்கும்என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

இந்தப் போட்டி இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார்ஸ் போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here