ஐபிஎல் 2020 : வர்ணணையாளர் குழுவில் இருந்து இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் நீக்கம்

The star-studded list for the commentary panel for upcoming Indian Premier League 2020 was announced on Monday (September 14).

0
366

ஐபிஎல் 2020 கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய், அபு தாபி, ஷார்ஜாவில் நடக்கிறது. வருகிற 19 ஆம் தேதி போட்டி தொடங்குகிறது.

இந்த சீசனுக்கான வர்ணணையாளர் குழுவின் முழு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதிகாரப்பூர்வ ஒளிபரப்பாளரான ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் பெயர்களை அறிவித்துள்ளது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் இந்தி, ஆங்கிலம் மற்றும் பிற மொழிகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. வர்ணனை குழுவில் பல புகழ்பெற்ற வீரர்களின் பெயர்கள்உள்ளன.

இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர், பிரபல வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே, குமார் சங்ககாரா, இயன் பிஷப், கெவின் பீட்டர்சன் மற்றும் பல வீரர்கள் ஆங்கில வர்ணணையாளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். லிசா ஸாலேகர் மற்றும் அஞ்சும்சோப்ரா ஆகிய 2 பெண் வர்ணனையாளர்களின் பெயர்களும் இந்த பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.

இது தவிர, ஆகாஷ்சோப்ரா, இர்பான்பதான், ஆஷிஷ்நெஹ்ரா, ஜதின்சப்ரு, நிகில்சோப்ரா, கிரண் மோரே, அஜித் அகர்கர் மற்றும் சஞ்சய் பங்கார் உள்ளிட்டபலர் இந்தி வர்ணணையாளர் குழுவின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை தேர்வாளராக இருந்த ஸ்ரீகாந்த், தமிழிலும், எம்.எஸ்.கே.பிரசாத் தெலுங்கிலும் வர்ணனை அளிப்பார்கள்.

இருப்பினும், இந்த பட்டியலில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் நீக்கப்பட்டுள்ளார். 2008 ஐபிஎல் தொடக்கத்திலிருந்து சஞ்சய் மஞ்ச்ரேக்கர் வர்ணனைக் குழுவின் ஒரு பகுதியாக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், இவர் பல ஆண்டுகளாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி.சி.ஐ.) டெலிவிஷன் வர்ணனையாளர் குழுவில் இருந்தார்.

பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியதால், சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கிரிக்கெட் வாரியத்தின் வர்ணனையாளர் குழுவில் இருந்து நீக்கப்பட்டார். கடந்த மார்ச் மாதம் இந்தியா – தென் ஆப்பிரிக்கா ஒருநாள் போட்டி தொடருக்கு முன்பு அவர் நீக்கம் செய்யப்பட்டார்.

தற்போது ஐ.பி.எல். போட்டி வர்ணனையாளர் குழுவில் தன்னை மீண்டும் சேர்த்துக் கொள்ளுமாறு சஞ்சய் மஞ்ச்ரேக்கர் பி.சி.சி.ஐ.-க்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஆனால் சுனில் கவாஸ்கர், எல்.சிவராமகிருஷ்ணன், முரளி கார்த்திக், ஹர்ஷா போக்லோ போன்றோருக்கு பிசிசிஐ வர்ணனை செய்யுமாறு இ-மெயில் அனுப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here