ஐபிஎல் 2020: டெல்லி – பஞ்சாப் அணிகள் மோதல்

Delhi Capitals take on Kings XI Punjab in the second match of IPL 2020

0
159

13-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நேற்று தொடங்கி நவம்பர் 10 ஆம் தேதி வரை நடக்கிறது.

அபிதாபியில் நேற்று(சனிக்கிழமை) நடைபெற்ற முதல் ஆட்டத்தில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர்கிங்ஸ் அணி, நடப்பு சாம்பியன் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியுடன் மோதியது. இறுதியில்  5 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது.

இந்நிலையில், துபாயில் இன்றிரவு (ஞாயிற்றுக்கிழமை) நடக்கும் 2-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் – கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன.

ஷிகர்தவான், பிரித்வி ஷா, கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர், ஹெட்மயர், ரிஷாப் பண்ட் என்று டெல்லி அணி மிரட்டலான பேட்டிங் வரிசையை கொண்டிருக்கிறது. அஸ்வின், ரஹானேயின் வருகை கூடுதல் பலம் சேர்க்கும்.

ஆனால் ரஹானேவுக்கு இடம் கிடைப்பது சந்தேகமே என்று டெல்லி அணியின் தலைமை பயிற்சியாளர் ரிக்கிபாண்டிங் தெரிவித்தார்.

கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணி கும்பிளேயின் பயிற்சியில், புதிய கேப்டன் லோகேஷ் ராகுல் தலைமையில் களம் காணுகிறது. சமீபத்தில் இங்கிலாந்து தொடரின் கடைசி ஒரு நாள் போட்டியில் கிளைன் மேக்ஸ்வெல் 7 சிக்சருடன் அதிரடியாக சதம் அடித்தார். அவர் பார்முக்கு திரும்பியிருப்பது பஞ்சாப் அணிக்கு மகிழ்ச்சி அளிக்கும். மேலும், மயங்க் அகர்வால், நிகோலஸ் பூரன், சர்ப்ராஸ்கான், முகமது ஷமி, காட்ரெல் என்று தரமான வீரர்கள் அணியில் உள்ளனர்.

முதல் ஆட்டத்தில் ’யுனிவர்சல் பாஸ்’  கிறிஸ்கெய்ல் வெளியே உட்காரவைக்கப்படலாம்.

மொத்தத்தில் சம பலத்துடன் இரு அணிகளும் மோதுவதால் ஆட்டம் அதிரடியாக இருக்கும். இவ்விரு அணிகளும் 24 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதி அதில் 14-ல் பஞ்சாப்பும், 10-ல் டெல்லியும் வெற்றி கண்டுள்ளன.

ஐ.பி.எல். வரலாற்றில் இதுவரை இறுதி சுற்றை எட்டாத ஒரே அணி டெல்லி என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here