11-வது சீசன் ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 7 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்கியது. இதில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடன் விளையாடியது. இப்போட்டியில், டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் டோனி,
பந்துவீச்சை தேர்வு செய்தார்.

முதலில் விளையாடிய ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்கள் எடுத்தது. வில்லியம்சன் 47 ரன்களும், யூசுப் பதான் 45 ரன்களும் எடுத்தது. இதன்மூலம் சென்னை அணிக்கு 179 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ஹைதராபாத் சன் ரைஸர்ஸ் அணி .

42

இதையடுத்து சென்னை அணி பேட்டிங் செய்தது. சென்னை அணியில் அதிகபட்சமாக வாட்சன் 57 பந்துகளில் 117 ரன்கள் எடுத்து மேன் ஆஃப் தெ மேட்ச் பட்டத்தை வென்றார்.

இறுதியில், சென்னை அணி 18.3 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. வாட்சன் 117 ரன்களுடன் அவுட்டாகாமல் களத்தில் இருந்தார். இதையடுத்து, 8 விக்கெட் வித்தியாசத்தில் ஹைதராபாத் வீழ்த்தி மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது

சென்னை பேட்டிங் விவரம்

Screen Shot 2018-05-27 at 11.12.06 PM

ஹைதராபாத் பேட்டிங் விவரம்

Screen Shot 2018-05-27 at 11.16.36 PM

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here