ஐபிஎல் மோசடியை வெளிக்கொண்டுவந்த மும்பை போலீஸ் உயர் அதிகாரி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

0
252

மகாராஷ்டிராவின் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவின் முன்னாள் தலைவரும், காவல்துறை கூடுதல் ஆணையருமான ஹிமான்ஷு ராய்
திடீரென துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துள்ளார்.

ஹிமான்ஷு ராய் 2013-ஆம் ஆண்டு மும்பையில் ஐபிஎல் ஸ்பாட் பிக்சிங், சூதாட்ட மோசடியை வெளிக் கொண்டு வந்தவர். ஐபிஎல் சூதாட்டப் புகாரில் இந்திய கிரிக்கெட் கவுன்சில் தலைவர் ஸ்ரீனிவாசனின் மருமகன் குருநாத் மெய்யப்பனை கைது செய்ததும் இவர்தான் . 2012 ஆம் ஆண்டு மும்பையில் வழக்கறிஞர் பல்லவி புருக்கயஸ்தாவின் வழக்கு, பத்திரிகையாளர் ஜே டே கொலை வழக்குபோன்றவற்றை விசாரித்ததும் இவர்தான்.

மகாராஷ்டிர மாநில பயங்கரவாதத் தடுப்புப் பிரிவின் தலைவராக இவர் பொறுப்பு வகித்த போது மும்பை அமெரிக்கன் பள்ளியை வெடி குண்டு வைத்து தகர்க்க நடந்த சதியை கண்டுபிடித்து, மென்பொருள் துறை பொறியாளர்
அனீஸ் அன்சாரியையும் கைது செய்தார்.

மும்பை பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்ட அஜ்மல் கசாப்புக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டதும் இவரது பதவிக் காலத்தில்தான். மும்பை குற்றவியல் பிரிவு தலைவராகவும் ஹிமான்ஷு ராய் இருந்துள்ளார். 2015 ஆம் ஆண்டு மஹாராஷ்டிர அரசின் தலையீட்டால் மாநில பயங்கரவாதத் தடுப்புப் பிரிவின் தலைவர் பதவியிலிருந்து மாற்றப்பட்டார்.

சில ஆண்டுக்கு முன்பு கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டிருந்ததால் 2016 ஆம் ஆண்டிலிருந்து மருத்துவ விடுப்பில் இருந்ததாகக்
கூறப்படுகிறது . அவர் இன்று (மே 11, வெள்ளிகிழமை) பிற்பகல் வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். உடனடியாக மருத்துவமனைக்கு அவர் எடுத்துச் செல்லப்பட்டார். ஆனால் அவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்

இதையும் படியுங்கள்: “பாஸ்வேர்டை மாற்றுங்கள்” – பயனர்களுக்கு டிவிட்டர் எச்சரிக்கை

இதையும் படியுங்கள்: #BanSterlite: “மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தை மூடிட்டுப் போக வேண்டியதுதானே”

இதையும் படியுங்கள்: மக்களின் வரிப்பணம் 198 கோடி ரூபாய் வீண்; 580 கேள்விகளில் 17 கேள்விகளுக்கு மட்டுமே பதில்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here