ஐபிஎல் போட்டியை இலவசமாகக் காண ஜியோ வழங்கும் சலுகைகள்

Reliance Jio has announced new prepaid recharge packs as part of the Jio Cricket Plans line-up, ahead of the start of the IPL 2020 T20 cricket extravaganza.

0
174

ஐபிஎல் போட்டியைத் தொலைக்காட்சியில் பார்க்க வேண்டுமென்றால் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் பக்கம் செல்லலாம். செல்போனில் பார்க்க வேண்டுமென்றால் ஹாட்ஸ்டாருக்குப் பணம் கட்ட வேண்டுமே என நீங்கள் நினைத்தால் அந்த எண்ணத்தை மாற்றிக்கொள்ளுங்கள்.

உங்கள் செல்போனில் ஜியோ இணைப்பு இருந்தாலே போதும், ஐபிஎல் போட்டியை இலவசமாகவே பார்க்க முடியும்.

அட, அப்படியா என ஆச்சர்யம் வருகிறதா, எனில் ஜியோவில் அறிமுகப்படுத்தியுள்ள இந்தத் திட்டங்களில் இணைந்துள்ளீர்களா எனப் பார்த்துக்கொள்ளுங்கள். இல்லாவிட்டால் இணைந்து கொள்ளுங்கள்.

ஹாட்ஸ்டாரில் ஒரு வருடத்துக்கு ரூ. 365 செலுத்தி விஐபி சந்தாதாரர் ஆகிவிட்டால் ஐபிஎல் போட்டியை ஹாட்ஸ்டார் தளத்தில் காணலாம்.

ஜியோவில் அப்படியே இலவசம். செல்போனில் ஜியோ இணைப்பு உள்ளதா, உடனே அதன் எண்ணை இந்தக் கட்டணங்களுக்கு ரீசார்ஜ் செய்து பலனை அனுபவியுங்கள். 

28 நாளுக்கு ரூ. 401-க்கு ரீசார்ஜ் செய்துகொண்டால் ஒரு வருடத்துக்கு டிஸ்னி + ஹாட்ஸ்டார் விஐபி சந்தாதாரர் ஆகிவிடுவீர்கள். இந்தத் தொகைக்கு ஒரு நாளைக்கு 3 ஜிபி இணைய டேட்டா கிடைக்கும். தொலைபேசி அழைப்புகளுக்கு கணக்கே இல்லை. 

freepressjournal-2020-09-cd716327-80db-4f07-8341-005fe43f919a-Screenshot-4

இன்னொரு திட்டமும் உண்டு. ஜியோ இணைப்பில் 56 நாள்களுக்கு ரூ. 598 செலுத்தினால் ஒரு வருடத்துக்கு டிஸ்னி + ஹாட்ஸ்டார் விஐபி சந்தாதாரர் ஆகலாம். இதற்கு ஒரு நாளைக்கு 2 ஜிபி இணைய டேட்டா கிடைக்கும்.

இதுதவிர 84 நாள்களுக்கு ரூ. 777 (ஒரு நாளைக்கு 1.5 ஜிபி இணைய டேட்டா), 365 நாள்களுக்கு ரூ. 2599 (ஒரு நாளைக்கு 2 ஜிபி இணைய டேட்டா) செலுத்தினாலும் ஒரு வருடத்துக்கு டிஸ்னி + ஹாட்ஸ்டார் விஐபி சந்தாதாரர் ஆகி ஐபிஎல் போட்டியைக் காண முடியும்.

டேட்டா தீர்ந்து போனாலும் கவலை வேண்டாம். 56 நாள்களுக்குக் கூடுதலாக ரூ. 499 செலுத்தினால் ஒரு நாளைக்கு 1.5 ஜிபி இணைய டேட்டா கிடைக்கும். அத்துடன் ஒரு வருடத்துக்கு டிஸ்னி + ஹாட்ஸ்டார் விஐபி சந்தாதாரராகவும் ஆகலாம். 

நன்றி : தினமணி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here