ஜெயா டி.வி. அலுவலகத்தில் கடந்த ஐந்து நாட்களாக நடந்து வந்த வருமான வரித்துறை சோதனை திங்கட்கிழமை (இன்று) நிறைவடைந்தது. மேலும், ஜெயா டிவியின் முதன்மை செயல் அதிகாரியான விவேக் ஜெயராமனை விசாரணைக்காக வருமான வரித்துறை அதிகாரிகள் அழைத்துச் சென்றனர்.

அதிமுக அம்மா அணி துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மற்றும் அவரது உறவினர்கள், ஆதரவாளர்கள் உள்ளிட்டவர்களுக்குச் சொந்தமான 150க்கும் மேற்பட்ட இடங்களில், கடந்த வியாழக்கிழமை (நவ.9) முதல் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இந்தச் சோதனை பல இடங்களில் நான்கு நாட்களுக்கும் மேலாக நீடித்தது.

இந்நிலையில் ஜெயா டிவி அலுவலகத்தில் நடைபெற்று வந்த சோதனை திங்கட்கிழமை (இன்று) நிறைவடைந்தது. இந்தச் சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாகக் கூறப்படுகிறது.

vivek

இதனைத்தொடர்ந்து ஜெயா டிவி நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி விவேக்கை விசாரணைக்காக வருமான வரித்துறை அதிகாரிகள் அழைத்துச் சென்றனர். முன்னதாக டிடிவி தினகரன் ஆதரவாளரான புகழேந்தி திங்கட்கிழமை (இன்று) விசாரணைக்காக சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜரானார்.

இதையும் படியுங்கள்: பணமதிப்பிழப்பை விமர்சித்து பாடல் – உண்மையை சொல்ல பயந்தது இல்லை என சிம்பு பேச்சு

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்