ஐடி துறையில் சுனாமி பேரலை; 1 லட்சம் பேர் வேலையிழக்கும் அபாயம்

0
384

ஐடி துறை உச்சத்தில் இருந்த காலகட்டத்தில் இன்ஃபோசிஸ், விப்ரோ, டெக் மகேந்திரா, காக்னிசண்ட் போன்ற நிறுவனங்கள், ஐடி படித்த பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பை அள்ளி வழங்கின. ஆனால் ஐடி துறையின் நிலைமை இப்போது தலைகீழாக உள்ளது.

இதையும் படியுங்கள் : ’மக்களின் வரவேற்பைப் பெறத் தொடங்கிய மூங்கில் வீடுகள்’

H1B விசா உள்ளிட்ட காரணங்களால் ஐடி நிறுவனங்கள், தங்களது நிறுவனத்தில் ஆட்குறைப்புப் பணியினை வேகப்படுத்தியுள்ளன. மாறிவரும் தொழில்முறை கோட்பாடுகள், அதிகரித்த விசா கட்டணம் போன்ற காரணங்களால் ஐடி நிறுவனங்கள் மிகக் குறைந்த ஊழியர்களை மட்டுமே பணிக்கு எடுத்துக்கொள்கின்றன. அதேநேரத்தில் நூற்றுக்கணக்கான ஊழியர்களைப் பணியிலிருந்து நீக்கும் நடவடிக்கையில் இறங்கியும் உள்ளன.

கடந்த 25 வருடங்களுக்கும் மேலாக டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த 56 வயது பெண் ஊழியர், தற்போது பணியிழந்து தவிக்கிறார். இனி அவரால், வேறொரு இடத்தில் பணியில் சேர்ந்தாலும், முன்னர் வாங்கிய ஊதியத்தில் பாதி கிடைப்பதே கேள்விக்குறியாக உள்ளது. இதுபோலத்தான் பணியிழந்த ஆயிரக்கணக்கானோரின் நிலைமையும்.

இதையும் படியுங்கள் : தனுஷ் காட்டிய டாட்டா – பிரபுதேவாவுடன் கைகோர்க்கும் கார்த்திக் சுப்பாராஜ்

சமீபத்தில் இன்ஃபோசிஸ் நிறுவனம், தனது நிறுவனத்தில் பணிபுரிந்த 3,500 ஊழியர்களைப் பணி நீக்கம் செய்துள்ளது. இதில் டெக்னிகல் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்கள், மூத்த கட்டட கலைஞர்கள், புராஜக்ட் மேனஜர், டெலிவரி மேனஜர், என எந்த பாகுபாடும் இல்லாமல் பணியிலிருந்து நீக்கப்பட்டு வருகின்றனர். இந்த ஆட்குறைப்பு வேலை, இன்னும் இரண்டு காலாண்டுகள் வரை தொடரும் என கூறப்படுகிறது. தற்போது இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் மட்டும் இரண்டு லட்சம் பேர் பணியில் உள்ளனர். இவர்களின் வேலை உத்தரவாதமும் கேள்விக்குறியாகிப் போயுள்ளது.

இது குறித்து இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர், “பணித் திறன் அடிப்படையில் ஆட்குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது வருடந்தோறும் நடைபெறும் வழக்கமான நடைமுறைதான்.” என்கிறார்.

இதையும் படியுங்கள் : தமிழில் தீர்ப்பு வழங்கத் தடை விதித்த உச்சநீதிமன்றம்

ஐடி துறையில் 30 முதல் 50 வயதுக்குட்பட்டவர்கள், வருட சம்பளம் 20 லட்சம் ரூபாய் என்ற அளவில் பணிபுரிந்து வருகின்றனர். டெக் மகேந்திரா ஐடி நிறுவனத்தில், கடந்த டிசம்பர் மாத கணக்கின்படி, 1,17,095 ஊழியர்கள் பணிபுரிந்து வந்தனர். ஆனால் தற்போது 7,000 முதல் 8,000 ஊழியர்கள் வரை பணியிலிருந்து நீக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. அதேபோன்று காக்னிசண்ட் நிறுவனம் 10,000 ஊழியர்களைப் பணியிலிருந்து நீக்கியுள்ளது. இது அந்த நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களின் எண்ணிக்கையில் ஐந்து சதவிகிதம் ஆகும். மேலும் விப்ரோ நிறுவனமும் 600 ஊழியர்களைப் பணியிலிருந்து நீக்கியுள்ளது.

ஆட்குறைப்புக்கான காரணம் என்ன?

நிறுவனத்தின் காலாண்டு முடிவில் கிடைக்கும் வருவாய் மிகக் குறைந்த அளவிலே இருப்பதால் இந்த நடவடிக்கையை ஐடி நிறுவனங்கள் மேற்கொண்டுள்ளன. கடந்த காலண்டில் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் வருவாய் 8-10 சதவிகிதம் உள்ளது. ஆனால் இதே காலகட்டத்தில் கடந்த காலாண்டில் இதன் வருவாய் 12-15 சதவிகிதம் வரை இருந்தது.

இது குறித்துப் பேசிய ஹெட் ஹண்டர்ஸ் என்னும் மனிதவள மேம்பாட்டு நிறுவனத்தின் முதன்மைச்ச் செயல் அதிகாரியான கிரிஷ் லக்‌ஷ்மிகாந்த், “தற்போது ஏற்பட்டுள்ள நிலைமை சுனாமி அலையைப் போன்றது. அடுத்த ஒரு வருடத்திற்குள் ஒரு லட்சம் பேர் வேலையிழக்கும் அபாயம் உள்ளது. எங்களிடம் ஐடி நிறுவனத்தில் துணைத்தலைவர் பதவியில் இருந்த 1000-க்கும் மேற்பட்டவர்களிடமிருந்து பணி வாய்ப்பு கோரி விண்ணப்பங்கள் வருகின்றன. இது மிகவும் சவாலான காலம்” என்கிறார்.

இதையும் படியுங்கள் : பெரியார் முதல் ஜெயலலிதா வரை திராவிட இயக்கத்தின் நேரடி சாட்சி கோ.சமரசம்

இந்த நிலை அதிகரிப்பிற்கு முக்கியக் காரணம் H1B விசா நடைமுறை மற்றும் அதன் அதிகப்படியான கட்டணமும்தான். இதனையடுத்து, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, சிங்கப்பூர் ஆகிய நாடுகளும் விசா நடைமுறையில் மாற்றங்கள் கொண்டு வந்து, தங்கள் நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கத் துவங்கி விட்டன. இதனால் ஐடி துறையில் உள்ளவர்களுக்கு இது போதாத காலம்தான்.

நன்றி : The Hindu – BusinessLine

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்