ஐடியா நிறுவனம் தற்சமயம் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திற்கு போட்டியாக ரூ.227/- ப்ரீபெயிட் திட்டத்தில் பல்வேறு சிறப்பு சலுகைகளை அறிவித்துள்ளது.

ஐடியா நிறுவனம் இப்போது அறிவித்துள்ள ரூ.227/- ப்ரீபெயிட் திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு மொத்தமாக 39.4ஜிபி டேட்டா கிடைக்கும் என்று தெரிவிக்கிறது.

இந்த திட்டத்தில் உள்ள மேலும் பல சிறப்பு அம்சங்களைப் பார்ப்போம்.

ரூ.227/- ப்ரீபெயிட் திட்டம்:

ஐடியாவின் ரூ.227/- ப்ரீபெயிட் திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு தினசரி 1.4ஜிபி டேட்டா வீதம் 28 நாட்களுக்கு பயன்படுத்தக் கூடிய வகையில் உள்ளது. மேலும் இலவச கால் அழைப்புகள், ரோமிங் மற்றும் தினசரி 100எஸ்எம்எஸ் போன்றவையும் இந்த திட்டத்தில் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வோல்ட்இ:

கடந்த மாதம் ஐடியா நிறுவனம் ஆறு மாவட்டங்களில் அதன் வோல்ட்இ சேவை அறிமுகம் செய்தது, பின்பு கூடுதலாக ஒன்பது மாவட்டங்களில் மற்றும் இறுதியாக ஐந்து மாவட்டங்களில் அதன் வோல்ட்இ சேவையை துவங்கியது. தற்சமயம் இந்தியா முழுவதும் 20 மாவட்டங்களில் ஐடியா நிறுவனம் அதன் வோல்ட்இ சேவையை வழங்கி வருகிறது.

முதல் வோல்ட்இ சேவையை மேற்கொள்வோருக்கு 10ஜிபி டேட்டாவும், பின்பு நான்கு வாரங்களுக்கு பின் சேவை குறித்த விமர்சனங்களை வழங்குவோருக்கு 10ஜிபி டேட்டா மற்றும் எட்டாவது வாரத்தில் மீண்டும் விமர்சனம் வழங்குவோருக்கு 10ஜிபி டேட்டா என மொத்தம் 30ஜிபி டேட்டா வழங்கப்பட இருக்கிறது.
.
வாய்ஸ் கால்:

வோல்ட்இ சேவைக்கு அப்கிரேடு செய்யும் ஐடியா வாடிக்கையாளர்கள் எச்டி(HD) தரத்தில் வாய்ஸ் கால்கள், 4ஜி டேட்டா, போன்ற சேவைகளை பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த வோல்ட்இ சேவைக்கு கட்டணம் எதுவும் தேவையில்லை என்று ஐடியா நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்மார்ட்போன்:

தற்சமயம் தேர்வுசெய்யப்பட்ட ஸ்மார்ட்போன்களில் மட்டுமே ஐடியா வோல்ட்இ வழங்கப்படும்,விரைவில் பல்வேறு நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்களில் இந்த வோல்ட்இ சேவை வழங்கப்பட இருக்கிறது. 4ஜி கிடைக்காத இடங்களில் தானாக 2ஜி மற்றும் 3ஜி நெட்வொர்க்-க்கு மாற்றப்பட்டு விடும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here