முகமது ஷமி வங்கதேசத்துக்கு  எதிரான ஆட்டத்தில் அபாரமான வகையில் பந்து வீசி இந்திய அணியின் வெற்றிக்கு அபாரமான பங்களிப்பை வழங்கினார். இரண்டு இன்னிங்சிலும் சேர்த்து 58 ரன்கள் விட்டுக்கொடுத்து 7 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார். இதனால் ஐசிசி தரவரிசையில் 790 புள்ளிகள் பெற்று 7 வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

இதற்கு முன் இந்திய பந்து வீச்சாளர்களில் கபில்தேவ் (877), பும்ரா (832) ஆகியோர் அதிக புள்ளிகள் பெற்றிருந்தனர். அதன்பின் முகமது ஷமி தற்போது 790 புள்ளிகள் பெற்றி 3 வது இடத்தில் உள்ளார்.

அஸ்வின் 10 வது இடத்திலும், இஷாந்த் சர்மா 20 வது இடத்திலும் உள்ளனர். பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் இரட்டை சதம் (243) அடித்த மயங்க் அகர்வால் பேட்ஸ்மேன் தரவரிசையில் 11-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். விராட் கோலி 2 வது இடத்தில் உள்ளார். புஜாரா 4 வது இடத்திலும், ரகானே 5 வது இடத்திலும் உள்ளனர். ரோகித் சர்மா 10 வது இடத்தில் உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here