சென்னை ஐ.ஐ.டி வளாகத்திற்குள் பிரதமர் மோடிக்கு எதிராக மாணவர்கள் கறுப்புச்சட்டை அணிந்து கோஷம் எழுப்பியது போலீசாரை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

காவிரி நீர் மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தமிழகம் முழவதும் அரசியல் கட்சிகள், பல்வேறு அமைப்புகள் போராட்டங்களைத் தீவிரப்படுத்தி வருகின்றன. இந்நிலையில் சென்னை அருகே திருவிடந்தையில் நடைபெறும் ராணுவ தளவாட கண்காட்சியைத் தொடங்கி வைக்க பிரதமர் மோடி இன்று (ஏப்.12) சென்னை வந்தார்.

முன்னதாக, பிரதமர் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கறுப்பு கொடி போராட்டம் நடத்துவோம் என்றும், விமானநிலையத்தை முற்றுகையிடுவோம் என்றும் பல்வேறு அமைப்புகள் அறிவித்திருந்தன. இதனையடுத்து, பிரதமர் மோடியின் பயணத்திட்டம் முழுவதும் வான் வழியாகவே அமைக்கப்பட்டிருந்தது.

அதன்படி, சென்னை விமானநிலையம் வந்திறங்கிய பிரதமர் மோடி, அங்கிருந்து திருவிடந்தைக்கு ஹெலிகாப்டர் மூலம் சென்றார். ராணுவ தளவாட கண்காட்சியைத் தொடக்கி வைத்துவிட்டு, சென்னை ஐஐடிக்கு திரும்பினார். அங்கிருந்து அடையாறு புற்றுநோய் மைய நிகழ்ச்சிக்கு அவர் சென்றார். இதற்காக, ஐஐடியிலிருந்து தரை மார்க்கமாக அடையாறு புற்று நோய் மையத்துக்குச் செல்லும் வகையில் புதிய பாதை தற்காலிகமாக அமைக்கப்பட்டது.

https://twitter.com/ThimiranVJ/status/984361770025271296

இந்தப் பாதை வழியாக, அடையாறு புற்று நோய் மையத்துக்கு அவர் காரில் சென்றார். அப்போது, அங்கிருந்த மாணவர்கள் சிலர், கறுப்புச் சட்டை அணிந்து, ‘காவிரி நீர் மேலாண்மை வாரியம் வேண்டும்’ என்று எழுதப்பட்ட பதாகைகளை கைகளில் ஏந்தியவாறு கோஷமிட்டனர்.

இதையும் படியுங்கள்: ஒக்கியால் பாதிக்கப்பட்ட பெண்களிடையே ஒத்துழைப்பை உருவாக்க வேண்டும்”

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்