ஐஎன் எக்ஸ் மீடியா வழக்கில் என்மீது குற்றச்சாட்டு இல்லை – காங்கிரஸ் அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த ப சிதம்பரம்

0
335

காங்கிரஸ் அலுவலகத்தில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் பேட்டி

ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் நான் குற்றம்சாட்டப்படவில்லை. ஐ.என்.எக்ஸ் வழக்கில் எனக்கோ, எனது குடும்பத்தினருக்கோ எந்த சம்பந்தமும் இல்லை என்று முன்னாள் நிதி அமைச்சர் ப சிதம்பரம் காங்கிரஸ் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த போது கூறினார். 

ஐ என் எக்ஸ் மீடியா வழக்கில் சிபிஐயும், அமலாக்கத் துறையும் தேடப்பட்டு வரும் நபர் ப சிதம்பரம் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் டெல்லியில் இருக்கும் காங்கிரஸ் அலுவலகத்தில் முன்னாள் நிதி அமைச்சர் ப சிதம்பரம் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய போது கூறியதாவது 

ஐஎன்எக்ஸ் வழக்கில் எனக்கு எதிராக எந்த குற்றச்சாட்டும் பதிவு செய்யப்படவில்லை; கடந்த 24 மணி நேரத்தில் பல்வேறு குழப்பங்கள் நடைபெற்றுள்ளன பொய்யர்களால் தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன

ஜனநாயகம், சுதந்திரத்தில் நம்பிக்கை கொண்டுள்ளேன்’7 மாதங்களுக்கு பின் எனது முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்துள்ளது டெல்லி உயர்நீதிமன்றம் . வழக்கில் சிபிஐ, அமலாக்கத்துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் என் பெயர் கூட இல்லை

சுதந்திரத்தை பெறவும் போராடினோம், சுதந்திரத்தை காக்கவும் போராடி வருகிறோம்; தனிநபர் சுதந்திரத்தை நீதிமன்றம் காப்பாற்ற வேண்டும். ஐஎன்எக்ஸ் வழக்கில் என் மீதும், குடும்பத்தினர் மீதும் எந்த முதல் தகவல் அறிக்கையும் பதிவு செய்யப்படவில்லை

உச்சநீதிமன்றத்தின் உத்தரவை தலைவணங்கி ஏற்கிறேன்; பாரபட்சமாக விசாரணை அமைப்புகளை பயன்படுத்தினாலும் சட்டத்தை மதிக்கிறேன். சிபிஐ, அமலாக்கத்துறை சட்டத்தை மதிப்பது உண்மை எனில் வெள்ளிக்கிழமை வரை காத்திருக்க வேண்டும் என்றார். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here