வெற்றிகரமாக கேன்சல் செய்து விட்டால், கேன்சலுக்கு பிடித்தம் செய்தது போக திருப்பி கிடைக்கும் பணமும் திரையில் வரும்.

இந்திய ரயில்வேயின் இணையதளமான இந்தியன் ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிஸம் கார்ப்ரேஷன் பதிவு செய்த டிக்கெட்டுகளை கேன்சல் செய்து கொள்ளவும் வழிவகை செய்துள்ளது. ஆன் லைனில் பதிவு செய்த டிக்கெட்டுகளை ஐஆர்சிடிசி ஆப் வழியாகவோ அல்லது ஐஆர்சிடிசி இணையதளம் வழியாகவோ கேன்சல் செய்ய முடியும். கேன்சல் செய்யப்பட்ட டிக்கெட்டின் பணம் பதிவு செய்யப்பட்ட கணக்கிற்கே திரும்ப செலுத்தப்படுகிறது. கேன்சல் செய்ததற்கு குறிப்பிட்ட அளவு பணம் பிடித்தம் செய்யப்படும். சார்ட் தயாரானபின் இ-டிக்கெட் கேன்சல் செய்ய நினைத்தால் டிடிஆர் (Ticket Deposit Receipt) படிவத்தை பூர்த்தி செய்து கேன்சல் செய்யலாம். ஐஆர்சிடிசி டிக்கெட்டை கேன்சல் செய்யும் போது தெரிந்துகொள்ளக் கூடியவை 

சார்ட் தயாராவதற்கு முன்பு கேன்சல்  செய்யும் வழிமுறை

1. சார்ட் தயாரவதற்கு முன் டிக்கெட்டை கேன்சல் செய்ய விரும்பினால் irctc.co.in என்ற இணைய தளத்திற்கு சென்று ‘’My Transactions’ என்ற டேப்பை திறந்து கேன்சல் செய்யலாம். 

2. ‘Booked Ticket History’  என்ற லிங்கில் உள்ள மெனு பாரை க்ளிக்  செய்யவும். 

3. பதிவு செய்யப்பட்ட டிக்கெட்கள் திரையில் வரும். அதில் நீங்கள் எந்த பயணத்தை கேன்சல் செய்ய விரும்புகிறிர்களோ அந்த டிக்கெட்டை தேர்வு செய்து கேன்சல் செய்யவும்.

4. மீண்டும் ஒரு முறை கேன்சல் செய்வதை உறுதி படுத்த ‘ஓகே’ பட்டனை அழுத்தவும். 

5. வெற்றிகரமாக கேன்சல் செய்து விட்டால், கேன்சலுக்கு பிடித்தம் செய்தது போக திருப்பி கிடைக்கும் பணமும் திரையில் வரும். கேன்சல் செய்து விட்டதற்கான உறுதிப்படுத்த குறுஞ்செய்தி பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பருக்கு வந்து விடும். 

சார்ட் தயாரான பின் கேன்சல் செய்யும் முறை

சார்ட் தயாரானபின் கேன்சல்லும் முறை என்பது டிடிஆர் படிவத்தை பூர்த்தி செய்து பதிவு செய்த டிக்கெட்டை கேன்சல் செய்யலாம். பின்வரும் காரணங்களினால் பயணி பயணம் செய்ய முடியாவிட்டால்  டிடிஆர் படிவத்தை பூர்த்தி செய்து டிக்கெட்டை கேன்சல் செய்யலாம். இந்திய ரயில்வேயினால் ரயில் ரத்து செய்யப்பட்டால், ரயில் 3 மணிநேரத்திற்கு மேலாக தாமதாக புறப்பட்டால், ஏசி சரியாக வேலை பார்க்காத காரணம், சரியான சான்று இல்லாமல் பயணம் செய்தார். பதிவு செய்யப்பட்ட டிக்கெட் ஆர்.ஏ.சி யாக இருந்தால் ரயில் புறப்படுவதற்கு 30 நிமிடங்களுக்கு முன் டிடிஆர் மூலம் டிக்கெட்டை கேன்சல் செய்யலாம். 

ஐஆர்சிடிசியில் பதிவு செய்த டிக்கெட்டை கேன்சல் செய்தால் பிடித்தம் செய்யப்படும் தொகை

1. கன்ஃபார்ம் ஆன டிக்கெட்டை ரயில் புறப்படுவதற்கு 48 மணிநேரத்திற்கு முன் கேன்சல் செய்தால் , ஏசி முதல் பிரிவு டிக்கெட்டாக இருந்தால் ரூ. 240 பிடித்தம் செய்யப்படும். ஏசி 2வது பிரிவாக இருந்தால் ரூ.200 ஆகவும், ஏசி 3 வது பிரிவாக இருந்தால் ரூ.180வாகவும், சிலிப்பர் வகுப்பாக இருந்தால்  ரூ.120 ஆகவும் இரண்டாம் வகுப்பாக இருந்தால் ரூ.60 ஆக இருக்கும். 

Class of ticketFlat cancellation charges per passenger
AC First/Executive ClassRs. 240 plus GST (Goods and Services Tax)
First Class/AC 2 TierRs. 200 plus GST
AC Chair Car/AC 3Tier/AC 3 EconomyRs. 180 plus GST
Sleeper ClassRs. 120
Second ClassRs. 60

2. உறுதிபடுத்தப்பட்ட டிக்கெட் 48 மணி நேரத்திற்குள் அல்லது ரயில் புறப்படும் 12 மணிநேரத்திற்கு முன்பு கேன்சல் செய்தால் 25 சதவீதம் பிடித்தம் செய்யப்படும். 

3. பதிவு செய்த டிக்கெட் 12 மணி நேரத்திற்கும் குறைவான நேரத்தில் ரத்து செய்யப்பட்டால் 50 சதவிகிதம் கட்டணம் ரத்து செய்யப்படும்.

Courtesy:  ndtv

3 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here