ஏ, தாழ்ந்த தமிழகமே!

2
1705

(அக்டோபர் 1,2015இல் வெளியான செய்தி மறுபிரசுரமாகிறது.)

பகுத்தறிவுப் பகலவன் பெரியார் பிறந்த மண் இது; பெரியாரின் நினைவுகள், சமகாலத் தமிழகத்தை எவ்வளவு சீற்றத்துடன் பார்த்திருக்கும் என்று எண்ணிப்பார்த்தபோது:

1.சிவகங்கையில் கண்டதேவி தேரோட்டத்தில் தலித்துகளும் தேர்வடம் பிடிப்பதைத் தடுப்பவன் தமிழன்.
2.தலித் மக்களின் சாமி ஊர்வலம் ஊருக்குள் வராமல் தடுப்பவன் தமிழன்; மீறி நுழைந்தால் பெட்ரோல் குண்டு வீசி எரிப்பவன் தமிழன்.
3.சேரித்தமிழன் தனக்குச் சமமாக எப்படி உட்காரலாம் எனப் போட்டுத்தள்ளியவன் தமிழன்.
4.தனித்தொகுதியில் எப்படித் தலைவனாகலாம் என்று மேலவளவில் தலையை அறுத்தவன் தமிழன்
5.தொகுப்பு வீடு கிடைக்க குடுத்த பணத்தைத் திருப்பிக் கேட்டவன் வாயில் பீயைத் திணித்தவன் தமிழன்.
6.தலித் சிறுமி தனம், பள்ளிக்கூட குடிநீரைத் தொட்டதற்குக், கண்ணில் குத்திக் குருடாக்கியவன் தமிழன்.
7. கீரிப்பட்டி, பாப்பாப்பட்டியில் தலித்துகள் ஓட்டுப் போடுவதைத் தடுப்பவன் தமிழன்.
8. ஜீன்ஸ் பேண்ட்டு, கூலிங் கிளாஸ் போட்டுக் காதலித்தவனைத் தண்டவாளத்தில் போட்டுத்தள்ளியவன் தமிழன்.
9.சக கல்லூரி மாணவியிடம் பேசியதற்காக தலையை அறுத்துத் தண்டவாளத்தில் வீசியவன் தமிழன்.
10.பள்ளி/கல்லூரிகளில் மாணவர்களின் கைகளில் ஜாதிக்கயிறு கட்டுபவன் தமிழன்.
11.சேரித் தமிழச்சி ஆக்கிய சத்துணவை எங்கள் குழந்தைகள் சாப்பிடுவதா எனப் பள்ளிக்கூடத்தையே புறக்கணித்தவன் தமிழன்.
12.சேரிப் பெண்களைப் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தி தன் ஜாதிப் பெருமையைக் காத்துக் கொண்டிருப்பவன் தமிழன்.
13.குருபூசையின் போது சேரித்தமிழனைப் பரமக்குடியில் சுட்டுக்கொல்பவன் தமிழன்.
14.அனைத்து சமுதாய பேரியக்கம் கட்டி உலகமயமாக்கலிலும் சேரித்தமிழனை ஒதுக்கியவன் தமிழன்.
15.இந்தியா ஊரும் சேரியுமாக பிரிந்துக்கிடப்பதை மறைப்பவன் தமிழன்.
16.கஞ்சித்தொட்டி முன் தட்டேந்தி நின்றபோதும் சேரிக்காரனோடு வரிசையில் நிற்பதா என கஞ்சித்தொட்டியிலும் சாதியைக் காப்பவன் தமிழன்.
17.சுனாமி பேரலையின் துயரத்திலும் சேரிக்காரனுக்கு நிவாரணப் பொருட்கள் கிடைப்பதைத் தடுத்தவன் தமிழன்.
18.சமத்துவம் வழங்கிய அரசியல் சட்ட மேதை அம்பேத்கரை தலித்துகளின் தலைவர் என்று ஜாதி நிறம் பூசுபவன் தமிழன்.
19.ஜாதிவெறி சொல்லால,டி.எஸ்.பி.யையே தூக்கு மாட்டிக்க வைத்தவனும் தமிழன்தான்
20.ஜாதி மாறி காதலிச்ச பேத்திய கழுத்த அறுத்துக் கொன்ன தாத்தாவும் தமிழன்தான்

ஏ, தாழ்ந்த தமிழகமே… சக மனிதனைச் சமமாகப் பாவித்து எழுந்து நட!

2 கருத்துகள்

  1. நீங்கள் குறிப்பிடுவது போல நடப்பது தமிழர்கள் மட்டுமில்லை. இந்தியாவில் உள்ள எல்லா மானிலங்களிலும் இது போன்ற அநீதிகள் நடக்கின்றன. தமிழகம் மட்டும் ஒரு தீவு இல்லை – அது மட்டும் நீதி தவராமல் நடக்க. தமிழா தமிழா என்று சொல்வதைவிட அதை கண்டிக்கும் போதே கூட நாம் இன்னும் ஒரு … எல்லாரையும் உள்ளடக்கிய அரசியலை பேச வேண்டுமோ என்று நினைக்கிறேன்.

  2. சுபா தேசிகன்… இந்தியாவின் நிலை இசையரசு அறியாததல்ல… இங்கே சில பேடிகள் டம்ளன் டம்ளன் என்று பினாத்துகிறார்கள். அந்த மரமண்டைகளுக்கு உறைக்கிறதா பார்ப்போம்!?

ஒரு பதிலை விடவும்