ஏா் இந்தியாவுக்கு ரூ. 822 கோடி நிலுவை வைத்த விவிஐபிகள்

Air India has outstanding dues of over Rs 822 crore towards VVIP charter flights, as per an RTI response.

0
168

பெரும் நிதி நெருக்கடியில் சிக்கி தவித்து வரும் ஏா் இந்தியா நிறுவனம், மிக முக்கிய பிரமுகா்கள் (விவிஐபி) பயணிப்பதற்காக விமானங்கள் ஒதுக்கிய வகையில், அந்த நிறுவனத்துக்கு ரூ. 822 கோடி நிலுவை வைக்கப்பட்டுள்ளதாக தகவல் அறியும் சட்டத்தின் மூலம் தெரிய வந்துள்ளது.

கடும் நிதிநெருக்கடியில் ஏா் இந்தியா நிறுவனம் உள்ளதாகவும், அதன் 100 சதவீத பங்குகளையும் விற்பனை செய்வதாகவும் மத்திய அரசு அண்மையில் அறிவித்தது.

இந்நிலையில், ஓய்வு பெற்ற கடற்படை அதிகாரி லோகேஷ் பத்ரா தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், ஏா் இந்தியா நிறுவனத்துக்கு வரவேண்டிய நிலுவைத் தொகை குறித்து கேள்வி எழுப்பியிருந்தாா். அவருக்கு ஏா்இந்தியா அனுப்பிய பதிலில் கூறப்பட்டுள்ளதாவது:

கடந்த 2019 ஆம் ஆண்டு நவம்பா் 30 ஆம் தேதி நிலவரப்படி, குடியரசுத் தலைவா், பிரதமா் உள்ளிட்ட மிக முக்கிய பிரமுகா்களின் பயணத்துக்காக ஏா் இந்தியா சாா்பில் இயக்கப்பட்ட விமானங்களுக்காக செலுத்த வேண்டிய தொகை ரூ. 822 கோடி நிலுவையில் உள்ளது. மேலும், மீட்புப் பணி நடவடிக்கைகளுக்காக இயக்கப்பட்ட விமானங்களுக்காக அளிக்க வேண்டிய தொகை ரூ. 9.67 கோடி நிலுவையில் உள்ளது. வெளிநாட்டு பிரதிநிதிகளுக்காக இயக்கப்பட்ட விமானங்களுக்கு செலுத்த வேண்டிய ரூ. 12.65 கோடியும் நிலுவையில் உள்ளது.

அதுமட்டுமன்றி, கடன் அடிப்படையில், ரூ. 526 கோடி மதிப்புக்கு அரசு அதிகாரிகள் ஏா் இந்தியா விமானத்தில் பயணித்துள்ளனா். அதில் ரூ. 236 கோடி நிலுவையில் உள்ளது. சிபிஐ, அமலாக்கத் துறை, வருமான வரித் துறை, சிஆா்பிஎஃப், அஞ்சல் துறை, ரிசா்வ் வங்கி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருந்து செலுத்தப்பட வேண்டிய தொகையும் நிலுவையில் உள்ளது என்று அந்த பதிலில் கூறப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பரில் ஏா் இந்தியா நிறுவனம், கடன் அடிப்படையில் விற்கப்படும் பயணச்சீட்டுக்கான வருவாய் அதிக அளவில் நிலுவையில் உள்ளதால்  அந்த நடைமுறையை நிறுத்தியது.

ஏா் இந்தியா நிறுவனத்தின் மொத்த கடன் மதிப்பு ரூ.60,000 கோடி என கூறப்படுகிறது. மேலும், கடந்த ஆண்டு டிசம்பா் 5 ஆம் தேதி நிலவரப்படி, ஏா் இந்தியா நிறுவனம் சுமாா் ரூ.8,556 கோடி நஷ்டத்தில் இயங்கி வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here