க்ரெய்க் ரைட் என்ற சதோஷி நகமோட்டோ

பிட்காயின் என்பது ஒருவருக்கொருவர் ரொக்க மதிப்பைப் பரிமாறிக் கொள்வதற்கான டிஜிட்டல் (கணினி/கைப்பேசி) சாதனம். இப்போது உலகம் முழுவதும் 50 கோடி மக்களால் பண்டமாற்றுக் கருவியாக இது பயன்படுத்தப்படுகிறது. இன்னும் 50 ஆண்டுகளில், 500 கோடி மக்கள் இந்த டிஜிட்டல் கரன்சியைப் பணப் பரிவர்த்தனைக்கான முக்கிய ஆதாரமாகப் பயன்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு கட்டத்தில் உலகத்திற்குப் பொதுவான நிதியாக பிட்காயின் ஏற்றுக்கொள்ளப்படும் என்கிற நம்பிக்கை உருவாகியிருக்கிறது. பிட்காயின் என்பதை டிஜிட்டல் பணம் என்றோ டிஜிட்டல் காசு என்றோ எளிதாகப் புரிந்துகொள்ளலாம். இதை உருவாக்கியவர் க்ரெய்க் ரைட் என்ற ஆஸ்திரேலிய கணினி மேதை. சதோஷி நகமோட்டோ என்ற பெயரிலும் அறியப்படுகிறார். 2009இல் இவர் பிட்காயினை உலகுக்கு அறிமுகம் செய்தார். உலக நாடுகள் பிட்காயினுக்கு வளர்ந்து வரும் ஆதரவை மதித்து, இதனை அங்கீகரிப்பதற்கான கட்டமைப்புகளை உண்டாக்குகின்றன.

நிதி நிறுவனங்களின் துணையின்றி இணையம் வழியாக ஒருவருக்கொருவர் ரொக்கப் பரிவர்த்தனை செய்வதற்கான பாதுகாப்பான வழிமுறைதான் பிட்காயின் அமைப்பு. “உழைப்புக்கான ஆதாரம்” பதிவு செய்து, பாதுகாக்கப்படுவதால் இந்த அமைப்பு மதிப்புக்குரியதாகவும் நம்பிக்கைக்குரியதாகவும் ஆகிறது. கணினியின் சக்தியைக் கொண்டு இந்த பிட்காயின் உருவாக்கப்படுகிறது. அதற்கான தடங்களைப் பதிவு செய்வதற்கான, நிரூபணம் செய்வதற்கான ஏற்பாடுகளை இந்த பிட்காயின் அமைப்பு தன்னகத்தே கொண்டுள்ளது. க்ரெய்க் ரைட்டுக்கு இப்போது 51 வயது. இவரது 25 ஆண்டு கால உழைப்பின் பலன்தான் இந்த பிட்காயினின் உருவாக்கம். வளரும் பருவத்தில் இவரது தாயார் மூன்று வேலைகளைச் செய்து இவருக்குச் சோறு போட்டார். கடின உழைப்பின் வலியும் மதிப்பும் தனக்குத் தெரியும்; தினமும் 150 ரூபாய்,250 ரூபாயைக் கூலி உழைப்பில் சம்பாதிப்பவர்களுக்கும் பயன்படத்தக்க அமைப்பாக பிட்காயின் உலகத்தை வளர்த்தெடுப்பதுதான் தனது ஆசை என்கிறார் க்ரெய்க் ரைட் என்ற சதோஷி நகமோட்டோ.

எம்மி விருதுக்குப் போன சாதனா

ஹூக்ளி நதியை ஆளும் ரேஷ்மா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here