ஏழைகளின் வாழ்க்கை தரத்தை உயர்த்த கொள்கைகளை மறு சீரமைப்பு செய்யுங்கள் : ரத்தன் டாடா

Tata, speaking at a virtual panel discussion on the “Future of design and construction” watched by several thousands, said the Covid-19 outbreak had served to underscore a crisis in housing which deprived lakhs of of Mumbai’s residents of fresh air and open space.

0
318

இந்தியாவில் குடிசைப்பகுதி மக்களுக்கு நல்ல வாழ்க்கைத் தரத்தை ஏற்படுத்திக் கொடுக்க அபிவிருத்தி கொள்கைகளை மறுசீரமைப்பு செய்ய வேண்டும் என டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

எதிர்காலத்தில் கட்டுமானம் மற்றும் திட்டமிடுதல் தொடர்பாக காணொலி காட்சி மூலம் நடைபெற்ற மாநாட்டில் ரத்தன் டாடா பேசிய அவர், இந்தியாவில் உள்ள குடிசைப்பகுதிகளில்  மக்கள் வாழ்வது கடினமான விஷயம் என குறிப்பிட்டுள்ளார்.

குடிசைகளை அகற்றி அவர்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் கட்டித் தந்தாலும் வேறு இடத்தில் புதிய குடிசைப்பகுதி உருவாவதாகவும், ஏழைகளின் வாழ்க்கை தரத்தை உயர்த்த கொள்கைகளை மறு சீரமைப்பு செய்வதே இதற்கு சிறந்த தீர்வு என அவர் தெரிவித்துள்ளார்.

இந்திய நகரங்களில் குடிசைகள் இருப்பதை நினைத்து இந்தியாவின் கட்டடக் கலைஞர்கள் வெட்கப்பட வேண்டிவரும் என்றும், புதிய இந்தியாவின் அங்கமாக சவாலை ஏற்றுக்கொண்டு குடிசைப்பகுதி மக்களுக்கு நல்ல வாழ்க்கைத் தரத்தை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டுமென்றும் அவர் தெரிவித்துள்ளார்

மிக நெருக்கமான பகுதிகளில் வாழ்வதை தவிர்க்க கொரோனா வைரஸ் புதிய விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளதாகவும் ரத்தன் டாடா  மேலும்தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here