ஏழைகளின் வங்கிக்கணக்கில் பணம் வரும்; இந்த அரசுக்கு வேறு வழி கிடையாது- ப.சிதம்பரம்

The Congress has been demanding cash transfer directly to the people's account to the tune of Rs 65,000 crore.

0
304

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. கோவிட்-19 எனப்படும் கொரோனா வைரஸால் நாட்டின் பொருளாதாரம் பெருமளவு முடங்கிப் போயுள்ளது. இதை சரிக்கட்ட மத்திய அரசு சார்பில் பல்வேறு அறிவிப்புகள் வந்த வண்ணம் உள்ளன. இதன் ஒரு பகுதியாக இந்த மாதத் தொடக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடி, 20 லட்சம் கோடி ரூபாய் அளவிலான நிதித் தொகுப்புப் பற்றி அறிவிப்பு வெளியிட்டார். 

இந்த நிதித் தொகுப்பில் சொல்லிக் கொள்ளும்படி பொருளாதார மீட்பு அறிவிப்புகள் இல்லையென காங்கிரஸ் தரப்பும் முன்னாள் மத்திய நிதி அமைச்சரான ப.சிதம்பரமும் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர். இந்நிலையில், காங்கிரஸின் ஆலோசனைகளை மத்திய அரசு ஏற்கும் நிலைக்கு வந்துள்ளதாக தெரிவித்துள்ளார் அவர். 

இது குறித்து ப சிதம்பரம் தனது டிவிட்டர் பக்கத்தில் , “நான் சில நாட்களுக்கு முன்னர் காங்கிரஸின் பரிந்துரைகளை இந்த அரசு ஏற்கும் நாள் வெகு தொலைவில் இல்லை என்று தெரிவித்திருந்தேன். இந்தப் பிடிவாதமான அரசுக்கு அனுபவம் மற்றும் முறையான முடிவுகள் எடுக்கும் தரப்பை மதிக்காமல் இருப்பதற்கான வாய்ப்பில்லை.

தற்போது அரசு, நாட்டின் ஏழை மக்களுக்கு நேரடியாக பணப் பரிமாற்றம் செய்ய முன்வந்துள்ளதாக தெரியப்படுத்தியுள்ளது. டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தித் தாளின் வந்த தலையங்கமே இதற்கான முதல் சான்று.

அதேபோல நிதிப் பற்றாக்குறையின் ஒரு பகுதியை பணமாக மாற்றுவது குறித்து ஆர்பிஐ-க்கு மத்திய அரசு தெரியப்படுத்தி உள்ளதாகவும் தகவல் தெரிந்த வட்டாரங்கள் ஒப்புக் கொண்டுள்ளன,” என்று பதிவிட்டுள்ளார். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here