இன்ஃபினிக்ஸ் நிறுவனம் இந்தியாவில் பட்ஜெட் விலையில் பேண்ட் 5 ஃபிட்னஸ் மாடலை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இது ஜூன் மாதத்தில் அறிமுகம் செய்த எக்ஸ்பேண்ட் 3 மாடலின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும்.

புதிய இன்ஃபினிக்ஸ் பேண்ட் 5 மாடலில் 0.96 இன்ச் கலர் ஸ்கிரீன் இதய துடிப்பு சென்சார், வாட்டர் ரெசிஸ்டண்ட் போன்ற பல்வேறு வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. பேண்ட் 5 மாடல் 0.96 இன்ச் 160×80 பிக்சல் TFT-LCD ஸ்கிரீன் வசதியுடன் வெளிவந்துள்ளது,  

மேலும் ஆண்ட்ராய்டு 4.4 மற்றும் ஐ.ஒ.எஸ் 9.0 மற்றும் அதன்பின் வெளியான சாதனங்களுடன் வேலை செய்யும்.  பேண்ட் 5 மாடலில் ஸ்டெப் கவுண்ட், ஸ்லீப் டிராக்கிங்,கலோரி கன்சம்ப்ஷன் டேட்டா, டிஸ்பிளே நேரம் மற்றும் தேதி, அலாரம் கடிகாரம், ஸ்மார்ட்போன் நோட்டிஃபிகேஷன் போன்ற பல வசதிகளும் வழங்கப்பட்டுள்ளன.

மேலும் ப்ளூடூத் 4.0, செடன்ட்டரி ரிமைண்டர், இதய துடிப்பு சென்சார்,3-ஆக்சிஸ் அக்செல்லோமீட்டர்,வாட்டர் ரெசிஸ்டண்ட்உள்ளிட்ட பல்வேறு அம்சங்களும் இவற்றுள் அடக்கம்.

குறிப்பாக ஏழு நாட்கள் பேட்டரி பேக்கப், 22 நாட்களுக்கு ஸ்டான்ட்பை வசதியை கொண்டுள்ளது இந்த மாடல்.  இன்ஃபினிக்ஸ் பேண்ட் 5 மாடலின் விலையைப் பொறுத்தவரை ரூ.17,999-ஆக நிர்ணயம்செய்யப்பட்டுள்ளது. பிளாக், புளூ மற்றும் சிகப்பு வண்ணங்களில் இந்த மாடல் கிடைக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here