ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்களுக்கு 15 நாள் தடை : துபாய் அதிரடி

Dubai-Air India Express Flights: As per the UAE government rules, each passenger travelling from India needs to bring an original Covid-negative certificate from RT-PCR test done 96 hours prior to the journey.

0
210

கொரோனா பரவல் காரணமாக சர்வதேச விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

அதேசமயம், கொரோனா ஊரடங்கால் வெளியேற முடியாமல் சிக்கி உள்ளவர்களை அழைத்து வருவதற்காக சிறப்பு விமானங்கள் மட்டும் இயக்கப்படுகின்றன.

கடந்த 15 ஆம் தேதியில் இருந்து துபாய்க்கு விமான சேவை துவங்கியுள்ளது.

இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இருந்து துபாய்க்கு கடந்த 4 ஆம் தேதி ஏர்இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் இயக்கப்பட்டது. அந்த விமானத்தில் பயணித்த ஒரு பயணிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து துபாய் விமான நிலையங்களில் ஏர்இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்களுக்கு 15 நாட்கள் (அக்டோபர் 2 வரை) தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதுமட்டுமின்றி இந்தியாவில் இருந்து கொரோனா நோயாளிகளை ஏற்றி வந்த வகையில், அந்த நோயாளிகளுக்கு ஆகும் அனைத்து செலவுகளையும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்தான் ஏற்க வேண்டும் என்று துபாய் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து கடிதம் எழுதி இருக்கும் துபாய் சிவில் ஏவியேஷன் ஆணையம், ”ஏற்கனவே பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து எச்சரித்துள்ளோம். இந்த எச்சரிக்கை மீறப்பட்டுள்ளது. இந்த வகையில் வரும் 15 நாட்களுக்கு அதாவது, வரும் செப்டம்பர் 18 முதல் அக்டோபர் 3 ஆம் தேதி வரை துபாய்க்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்களுக்கு தடை விதிக்கப்படுகிறது. நோயாளிகளின் சிகிச்சை செலவை ஏற்க வேண்டும். அடுத்த உத்தரவு வரும் வரை இந்த தடை செல்லுபடியாகும்” என்று தெரிவித்துள்ளது.

துபாய் விமான நிலையங்களில் விமான சேவைக்கு தடை விதிக்கப்படுவது இரண்டாவது முறையாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here