வாடிக்கையாளர்களுக்கு ஏர்டெல் நிறுவனம் மூன்று புதிய ட்ரூலி அன்லிமிட்டெட் சலுகைகள் அறிவித்துள்ளது.  இவை முறையே  ரூ. 219, ரூ. 399 மற்றும் ரூ. 449 என இவற்றின் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

புதிய ரூ. 219 பிரீபெயிட் சலுகையில் அனைத்து நெட்வொர்க்களுக்கும் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 1.5 ஜி.பி. டேட்டா, தினமும் 100 எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. 

ரூ. 399 சலுகையில் அனைத்து நெட்வொர்க்களுக்கும் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 1.5 ஜி.பி. டேட்டா, தினமும் 100 எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை 56 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது.

ரூ. 449 சலுகையில் அனைத்து நெட்வொர்க்களுக்கும் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 2 ஜி.பி. டேட்டா, தினமும் 90 எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை 56 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.

புதிய ட்ரூலி அன்லிமிட்டெட் சலுகைகள் தவிர ஏர்டெல் வழங்கி வரும் மற்ற அன்லிமிட்டெட் சலுகைகளுக்கும் இந்தியா முழுக்க அனைத்து நெட்வொர்க்களுக்கும் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் எவ்வித கட்டுப்பாடும் இன்றி வழங்கப்படுகிறது.

அனைத்து நெட்வொர்க்களுக்குமான அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் இன்று (டிசம்பர் 7) முதல் வழங்கப்படுகிறது. முன்னதாக ஏர்டெல் நிறுவன சேவை கட்டணம் 40 சதவீதம் விலை உயர்த்தப்பட்டது இங்கு குறிப்பிடத்தக்கது. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here