இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களுள் ஒன்றான பாரதி ஏர்டெல்லின் 2 பில்லியன் டாலர் மதிப்பிலான பங்குகளை வாங்க அமேசான் நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் முக்கியமான தொலைத்தொடர்பு நிறுவனமான பாரதி ஏர்டெல் இருந்து வருகிறது. கடந்த 2015 ஆம் ஆண்டு ரிலையன்ஸ் ஜியோவின் வருகைக்கு பின்னர் எர்டெல் நிறுவனம் பெரும் சாவால்களை சந்திக்க நேர்ந்தது. ஜியோவின் அதிரடி அறிவிப்புகளுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் திணறி வந்தது. இருப்பினும் தனக்கென உள்ள பிரத்யேக வாடிக்கையாளர்கள் காரணமாக இந்தியாவில் தனது இடத்தை தக்கவைத்து கொண்டுள்ளது.

இதனை தொடர்ந்து எதிர்காலத்தில் ஜியோவுடன் போட்டியிடும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை ஏர்டெல் மேற்கொண்டு வருகிறது. அதில் ஒரு பகுதியாக தற்போது அமேசான் மற்றும் பாரதி ஏர்டெல் இடையேயான பேச்சுவார்த்தை அமைந்துள்ளது.

ஏர்டெல்லிடம் உள்ள 2 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் 15,000 கோடி ரூபாய்) மதிப்பிலான பங்குகளை வாங்க அமேசான் முடிவு செய்துள்ளது. அதாவது ஏர்டெல் நிறுவனத்தின் 5% பங்குகள்.

தற்போது ஏர்டெல் மற்றும் அமேசான் இடையேயான பேச்சுவார்த்தைகள் ஆரம்ப கட்டத்தில் உள்ளன, இதனால் ஒப்பந்த விதிமுறைகள் மாற வாய்புள்ளதோடு உடன்பாடு எட்டப்படாமல் போகலாம் எனவும் கூறப்படுகிறது. மேலும் இது தொடர்பான பேச்சுவார்த்தைகளும் ரகசியமாகவுள்ளன.

அமேசான் நிறுவனம் இந்தியாவை ஒரு முக்கியமான வளர்ச்சி சந்தையாக கருதுவதால் இங்கு 6.5 பில்லியன் டாலர் முதலீடுகளை மேற்கொண்டுள்ள அந்நிறுவனம் முக்கியமாக ஈ-காமர்ஸ் தடத்தை விரிவாக்கும் செயல்களிலும் ஈடுபட்டு வருகிறது.

அமேசான் பேச்சுவார்த்தை குறித்த செய்தி வெளியான நிலையில் இந்திய பங்குச்சந்தையில் ஏர்டெல் நிறுவன பங்குகள் இன்று 3.8% உயர்ந்து வர்த்தகமானது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here