ஏர்டெல் நிறுவனம் அன்லிமிடெட் போன் கால்ஸ் மற்றும் ரூ.1.5 ஜிபி டேட்டாவுடன் புதிய ஆஃபரை அறிவித்துள்ளது.

ஏர்டெல் இன்று(வியாழக்கிழமை) இரண்டு புதிய ரீசார்ஜ் சலுகைகளை அறிவித்திருக்கிறது. பிரிபெய்டு வாடிக்கையாளர்களுக்கான இந்த சலுகைகள் ரூ.279 மற்றும் ரூ.379 விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, ரூ.279 சலுகையில், அனைத்து நெட் ஒர்க்குகளுக்கும் அன்லிமிடெட் போன் கால்ஸ் மற்றும் 1.5 ஜிபி டேட்டா வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் தினந்தோறும் 100 எஸ்.எம்ஸ்.எஸ் அனுப்பிக்கொள்ளலாம். இந்த சலுகை 28 நாட்களுக்கானது எனவும் கூறப்பட்டுள்ளது.

இதேபோன்று ரூ.379 சலுகை அனைத்து நெட் ஒர்க்குகளுக்கும் அன்லிமிடெட் போன் கால்ஸ் பேசிக்கொள்ளலாம். அத்துடன் 6 ஜிபி டேட்டாவும் வழங்கப்படும். மேலும், 900 இலவச எஸ்.எம்.எஸ்கள் அனுப்பிக்கொள்ளலாம். இதுதவிர ஃபாஸ்டாக்கில் ரூ.100 வரை கேஷ்பேக் பெறலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது 84 நாட்களுக்கு மட்டுமே. 

சமீபத்தில் ஏர்டெல் தங்கள் வாடிக்கையாளர்களின் மாதாந்திர அடிப்படை சேவைக் கட்டணத்தை ரூ.35 லிருந்து ரூ.45 ஆக உயர்த்தியது. இந்நிலையில் இந்த இரண்டு புதிய பேக்கேஜ்களை அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here