ஏர்டெலில் ரீசார்ஜ் செய்யாத வாடிக்கையாளர்களுக்கு 1ஜிபி டேட்டா, வாய்ஸ்கால் ஆகியவை இலவசமாக வழங்கப்படுகின்றன. 

ஜியோவுக்குப் போட்டியாக ஏர்டெல் நிறுவனமும் டேட்டா, வாய்ஸ் கால் பிளான்களை புதுப்பித்து வருகிறது. அந்த வகையில் அண்மையில் ஏர்டெலில் குறைந்தபட்ச ரீசார்ஜான 48 மற்றும் 49 ரூபாய் திட்டத்தில், 1 ஜிபி இலவச டேட்டா வழங்கப்பட்டன. இது தேர்வு செய்யப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டது. 

இந்த நிலையில், தற்போது சோதனை முறையில் ரீசார்ஜ் செய்யாத வாடிக்கையாளர்களுக்கு 1ஜிபி இலவச டேட்டா, அன்லிமிடேட் வாய்ஸ்கால் வழங்க உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. இது நாடு முழுவதும் வருகிறதா, அல்லது குறிப்பிட்ட வட்டங்களில் மட்டும் வழங்கப்படுகிறதா என்பது குறித்த விவரங்கள் வெளியாகவில்லை.

இருப்பினும், ஏர்டெலில் ரீசார்ஜ் செய்யாத வாடிக்கையாளர்கள் தங்களுக்கு ஏர்டெல் தரப்பில் இருந்து மெசேஜ் வந்துள்ளதாக சமூகவலைதளங்களில் தெரிவிக்கின்றனர்.
 

அதன்படி, மூன்று நாட்களுக்கு தினமும் 1 ஜிபி டேட்ட, அன்லிமிடேட் வாய்ஸ்கால், இன்கம்மிங், அவுட்கோயிங் கால்கள் வழங்கப்படுவதாக தெரிகிறது. இதுதொடர்பான முழுமையான விவரங்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Courtesy: gadgets360

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here