ஏப்.1 முதல் மண்ணெண்ணெய் மானியம் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்: மத்திய அரசு

0
239

ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் மண்ணெண்ணெய்க்கான மானியம் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

சமையல் எரிவாயு சிலிண்டருக்கான மானியத்தை நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்துவதுபோல் மண்ணெண்ணெய்க்கான மானியத் தொகையையும் வங்கிக் கணக்கில் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் செலுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இத்திட்டம் சத்தீஸ்கர், ஹரியானா, ஹிமாச்சல பிரதேசம் ஜார்க்கண்ட், மத்தியப் பிரதேசம், மஹாராஷ்டிரா, பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் ஆகிய எட்டு மாநிலங்களில் உள்ள குறிப்பிட்ட 26 மாவட்டங்களில் அமல்படுத்தப்பட உள்ளது.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்