ஏப்ரில்லா நிறுவனத்தின் புதிய ‘எஸ்.ஆர். 160’ ஸ்கூட்டர்

The Aprilia SR 160 has been launched in India at Rs 1,03,269 (ex-showroom Delhi). It commands a premium of Rs 19,419 over the previous Aprilia SR 150.

0
133

ஏப்ரில்லா நிறுவனம் தனது புதிய ‘எஸ்.ஆர். 160’ மாடல் ஸ்கூட்டரை  விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. டெல்லி எக்ஸ்ஷோரூம் விலை ரூ. 1.07 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இந்த ஸ்கூட்டர் பி.எஸ் – 6 தரத்திலான 160 சி.சி., ஒரு சிலிண்டர் இன்ஜின் திறன் கொண்டது. இது அதிகபட்சமாக 10.9 பி.எச்.பி., பவர், 11.6 என்.எம்., டார்க் செயல் திறன் வழங்குகிறது.

செமி டிஜிட்டல் ஸ்பீடா மீட்டர், அலாய் வீல், டியூப்லெஸ் டயர், முன்சக்கரம் டிஸ்க் பிரேக், பின்சக்கரம் டிரம் பிரேக், முன்புறம் டெலிஸ்கோப்பிக் போர்க் சஸ்பென்சன், பின்புறம் மோனோஷாக் சஸ்பென்சன்,

6 லிட்டர் கொள்ளளவு பெட்ரோல் டேங்க் போன்ற வசதிகள் உள்ளன. இதன் நீளம் 1985 மி.மீ. 15 வினாடிகளில் 80 கி.மீ., வேகத்துக்கு மாறலாம். மைலேஜ் ஒரு லிட்டருக்கு 36 கி.மீ.

‘எஸ்.ஆர். 160’ மாடல் ஸ்கூட்டர்  சிவப்பு மற்றும் கருப்பு, மேட் பிளாக், சிவப்பு மற்றும் வெள்ளை, சிவப்பு மற்றும் பச்சை ஆகிய நிறங்களில் கிடைக்கிறது.

(இந்தக் கட்டுரை பல்வேறு தரவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது.)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here