ஏப்ரல் 9-ந்தேதிக்குபிறகுயாரும்கருத்துகணிப்புவெளியிடக்கூடாதுஎன்றுதமிழகதலைமைதேர்தல்அதிகாரிசத்யபிரதசாகுஉத்தரவிட்டுள்ளார்.

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு, சென்னை தலைமை செயலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறை மீறல்கள் முழுமையாக அமலில் இருக்கும் நிலையில், எந்தவித ஆவணமும் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட ரூ.33.46 கோடி பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. அத்துடன் 209 கிலோ தங்கம், 317 கிலோ வெள்ளி மற்றும் பரிசு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.

தமிழகத்தில் உள்ள 39 பாராளுமன்ற தொகுதிகளுக்கு 40 பொது பார்வையாளர்களை தேர்தல் ஆணையம் நியமித்து உள்ளது. இதில் தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதிக்கு மட்டும் 2 பொது பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இதுதவிர 18 சட்டசபை இடைத்தேர்தலுக்கான பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்குவதற்கு 48 மணி நேரத்திற்கு முன்பாகவே ஊடகங்கள் தேர்தல் கருத்து கணிப்புகளை வெளியிடக்கூடாது. அந்த வகையில் ஏப்ரல் 11-ந்தேதி முதல் கட்ட தேர்தல் தொடங்குகிறது. எனவே ஏப்ரல் 9-ந்தேதிக்கு பிறகு எவரும் கருத்து கணிப்பு வெளியிடக்கூடாது.

கருத்து கணிப்புகளை சேகரிக்கலாம், ஆனால் கடைசி கட்ட தேர்தல் நடக்கும் வரை வெளியிடக்கூடாது என்று தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here