ஏப்ரல் 27-ல் ஊரடங்கு தளர்வு

Sri Lanka will lift the nationwide curfew imposed to stem the spread of the coronavirus on Monday, police said as the total number of infections in the country surged past 400.

0
172

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுப் பாதித்தவர்களின் எண்ணிக்கை 420 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில், எப்ரல் 27 ஆம் தேதி நாடு முழுற்வதும் பிரப்பிக்கப்பட்டிருக்கும் ஊரடங்கு தளர்த்தப்படும் என்று இலங்கை காவல்துறை தெரிவித்துள்ளது.

நேற்று(வெள்ளிக்கிழமை) ஒரே நாளில் இலங்கையில் அதிகபட்சமாக 49 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில், இலங்கையின் கடற்படையில் மட்டும் 30 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வெள்ளிக்கிழமை நிலவரப்படி, இலங்கையில் 417 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கும் நிலையில், தற்போது அங்கு பாதிப்பு எண்ணிக்கை 420 ஆக் உயர்ந்துள்ளது. 7 பேர் மரணம் அடைந்துள்ளனர். 190 பேர் குணமடைந்துவிட்டனர்.

இந்த நிலையில், இலங்கையில் ஏப்ரல் 27 ஆம் தேதி திங்கட்கிழமை காலை 5 மணி முதல் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படுவதாக இலங்கை காவல்துறை வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த இலங்கையில் மார்ச் 20 ஆம் தேதி முதல் 24 மணி நேர முழு ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

(இந்தக் கட்டுரை பல்வேறு தரவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது.)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here