ஏபிபி நியூஸ் சேனலின் நிர்வாக இயக்குனர் மிலிந்த் கண்டேகர், ஏபிபியின் மூத்த பத்திரிகையாளர் புன்யா பிரசன் பாஜ்பாயயும் வேலையை விட்டு நின்றனர். பத்திரிகையாளர் பாஜ்பாய் வேலை விட்டு நின்றுவிட்டதாகவும், அதைப்பற்றி விரிவாக பேச இயலாது என்றும் Scroll.in  – டம் தெரிவித்துள்ளார். பாஜ்பாய் ஏபிபியில் மாஸ்டர் ஸ்டோரோக் (Masterstroke) என்ற நிகழ்ச்சியை நடத்தி வந்தவர்.

செய்தி அறையில் நடந்த இந்த சம்பவம் பத்திரிகை சமூகத்திற்கு அப்பால் பெரிய அலைகளை உருவாக்கியது .
காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவால் அதிகாரத்தில் இருப்பவர்களைப் பற்றிய உண்மையை பேசியதால் அவரை வேலையை விட்டு தூக்கிவிட்டனர் என்று தனது டிவிட்டரில் பதிவிட்டார். இது ஏபிபி சேனல் கமல் ஆப்பரேஷன் என்றும் கூறியிருந்தார்.

பத்திரிகையாளர்களுக்கு எதிரான அடக்குமுறைகளைப் பற்றி திரிணாமுல் காங்கிரஸின் மூத்த தலைவர் டெரெக் ஒ பிரெய்ன் ராஜ்ய சபாவில் குரல் கொடுத்தார்.

இதன் பின்னணி

கடந்த மாதம் பிரதமர் மோடி மன் கி பாத்தில் சத்தீஸ்கரைச் சேர்ந்த பெண் ஒருவருடன் உரையாடியது அரசு சார்பில் ஒளிபரப்பப்பட்டது. அப்போது அந்தப் பெண் பிரதமரிடம், விவசாயத்தில் தனது வருவாய் இரட்டிப்பானது என்றும் எவ்வாறு அதிகரித்திருக்கிறது என்பது குறித்தும் பேசினார். இதன் பிறகு அந்தப் பெண்ணை நேரில் சென்று பேட்டி கண்டது ஏபிபி செய்தி சேனல். அப்போது, அந்தப் பெண், ‘எனக்கு அப்படி பேசும்படி சொல்லிகொடுக்கப்பட்டது’ என்றார். இந்தப் பேட்டி மாஸ்டர்ஸ்ட்ரோக் நிகழ்ச்சியில் ஒளிபரப்பானது . இங்குதான் மாஸ்டர் ஸ்டோரோக் நிகழ்ச்சிக்கு வந்தது சோதனை .  

இந்த நிகழ்ச்சி மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது . ராகுல் காந்தியும் இந்நிகழ்ச்சியின் ஒரு பகுதியை கோடிட்டு தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்திருந்தார்.

மோடியை எதிர்க்கும் பத்திரிகையாளர்கள்தான் இவ்வாறு செய்கின்றனர் என்று பாஜக எம்பிக்கள் இந்த நிகழ்ச்சியை எதிர்த்து பேசினார்கள் . பொய்யான செய்தி என்று கூறினார்கள் .

பாஜகவின் இந்தக் குற்றச்சாட்டுக்கு ஏபிபி சேனல் மற்றொரு வீடியோ பதிவிட்டு விளக்கமளித்தது .

இதன் பிறகு பாஜக தலைவர்கள் சேனலை புறக்கணித்தனர் என்று சேனல் நெட்வொர்க்குடன் பழக்கமான மக்கள் தெரிவித்தனர்.

சேனலை பார்க்க முடியவில்லை என்று டிவிட்டரில் பார்வையாளர்கள் பதிவிட்டனர். மாஸ்டர் ஸ்டோரோக் நிகழ்ச்சியை பார்க்க முடியவில்லை என்று தொடர்ந்து இந்த நிகழ்ச்சியைப் பார்த்துவரும் ஏபிபியின் பார்வையாளர்கள் கூறினர். ஜூலை 13 முதல் இந்த புகார்கள் வந்தவாறு இருந்தது.

பெயர் வெளியிட விரும்பாத ஏபிபியின் மூத்த பத்திரிகையாளர் ஒருவர் இந்த பிரச்சனை ஜூலை முதல் வாரத்தில் ஆரம்பமாகியது. எங்களுக்கு எல்லா செய்திகளும் ஒன்றுதான். நாங்கள் செய்தியை செய்தியாக பார்க்கிறோம். தற்போது உள்ள காலத்தில் எல்லாவற்ரையும் பிரித்து பார்க்கிறார்கள் நாம் என்ன செய்தாலும் அதை மோடியின் ஆதரவாளர் என்றும் மோடிக்கு வேண்டாதவர் என்றும் பார்க்கப்படுகிறது.

பட்டினிச் சாவு, வேலையின்மை, விவசாயி தற்கொலைகள் பற்றி எதிலும் கவனம் செலுத்தாமல் ஏபிபி சேனலின் சிக்னலை சீர்குலைக்கும் முயற்சிகள் மட்டுமே நடக்கிறது என்று பத்திரிகையாளார் பாஜ்பாய் ஜுலை 26 ஆம் தேதி தனது டிவிட்டரில் பதிவிட்டார்.

மாஸ்டர் ஸ்டோரோக் 9 மணிக்கு ஒளிபரப்பாகும் போது ஏபிபி சேனல் இருட்டடிப்பு செய்யப்பட்டது .

இந்த இருட்டடிப்பு பற்றி டாடா ஸ்கை மற்றும் ஏர்டெல் டிஷ் -டம் விளக்கம் கேட்ட போது இது ஏபிபி சேனலின் தவறுதான் என்று கூறியது .

மூத்த பத்திரிகையாளர் ராஜ்தீப் சர்தேசாய் தனது டிவிட்டர் பக்கத்தில் ஏபிபி சேனல் மாஸ்டர் ஸ்டோரோக் ஒளிபரப்பபடும் 9 மணிக்கு இருட்டடிப்பு செய்யப்படுகிறது என்றும் பத்திரிகை சுதந்திரம் நசுக்கப்படுகிறது என்றும் டிவீட் செய்திருந்தார். மேலும் இவ்வளவு நடந்தும் அதைப்பற்றி தைரியமாக பேச சேனலில் இருப்பவர்களும் , வெளியில் இருப்பவர்களில் ஒருவர் கூட இல்லை என்றும் டிவீட் செய்தார்.

மூத்த பத்திரிகையாளர் பாஜ்பாய் வேலையை விட்டு நின்ற பிறகு, ஏபிபியின் மற்றுமொரு பத்திரிகையாளர் அபிசார் சர்மாவும் விடுப்பில் போய்விட்டார்.

Courtesy : Scroll.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here