நடிகர் எஸ்வி.சேகர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.

பாஜகவைச் சேர்ந்தவரும் நகைச்சுவை நடிகருமான எஸ்.வி.சேகர், தனது முகநூல் பக்கத்தில், பெண் பத்திரிகையாளர்களை இழிவுபடுத்தும் விதத்தில் கீழ்த்தரமான கருத்துகளைப் பதிவிட்டிருந்தார். இந்தப் பதிவுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் எழுந்தன. இதனையடுத்து அந்தப் பதிவை அவர் நீக்கிவிட்டார். மேலும், நண்பர் எழுதிய கருத்தைப் படிக்காமல் தவறுதலாக அதனைப் பகிர்ந்து விட்டதாகவும், பின்னர் அதனை நீக்கி விட்டதாகவும் விளக்கமளித்திருந்தார்.

tamilisai

இந்நிலையில் இது குறித்து பேசிய பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், சமூக வலைத்தளங்களில் அவதூறாக எழுதிவிட்டு, அதன்பின் இல்லை என்று கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றார். எஸ்வி.சேகர் மீது நடவடிக்கை எடுக்க முயன்று வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்: ஒக்கியால் பாதிக்கப்பட்ட பெண்களிடையே ஒத்துழைப்பை உருவாக்க வேண்டும்”

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்