எஸ்.பி.ஜனநாதனின் புதிய படம் – விஜய் சேதுபதி, ஸ்ருதி நடிக்கிறார்கள்

0
137

எஸ்.பி.ஜனநாதன் இயக்கும் படத்தில் விஜய் சேதுபதி, ஸ்ருதிஹாசன் இணைந்து நடிக்கிறார்கள்.

இடதுசாரி சிந்தனையுடன் படம் எடுப்பவர் எஸ்.பி.ஜனநாதன். அவரது படங்களில் சமூகநல கருத்துகள் தூக்கலாக இருக்கும். தனது அடுத்தப்படத்தையும் அதே திசையில் எடுக்கிறார் ஜனநாதன். படத்தின் பெயர் லாபம். லாபத்துக்கான கேப்ஷன், டே லைட் ராபரி. அதாவது பகல்நேர கொள்ளை.

எஸ்.பி.ஜனநாதனின் முந்தையப் படம் புறம்போக்கு என்னும் பொதுவுடமை படத்தில் விஜய் சேதுபதி நடித்திருந்தார். லாபத்திலும் அவர்தான் நாயகன். நாயகி ஸ்ருதிஹாசன். முக்கிய வேடத்தில் ஜெகபதி பாபு. படத்தை விஜய் சேதுபதியும், 7 சி என்டர்டெயின்மெண்ட் ஆறுமுக குமாரும் இணைந்து தயாரிக்கிறார்கள்.

இசை டி.இமான், ஒளிப்பதிவு ராம்ஜி, கலை இயக்கம் செல்வகுமார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here