வழக்கமான வைப்புத் தொகை திட்டங்களுக்கு மாற்றாக எம்.ஓ.டி.எஸ். என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

புதிய திட்டத்தின்படி ரூ. 1,000-ஐ செலுத்தி அக்கவுன்ட் ஓபன் செய்து கொள்ளலாம்.

எம்.ஓ.டி.எஸ். எனப்படும் பல்வாய்ப்பு டெபாசிட் திட்டத்தை ஸ்டேட் வங்கி தற்போது அறிமுகம் செய்துள்ளது. சேமிப்பு கணக்குடன் இந்த திட்டத்தை இணைத்துக் கொள்ளலாம் என ஸ்டேட் வங்கி தெரிவித்துள்ளது. வழக்கமான வைப்புத் தொகை கணக்குகளுக்கு மாற்றமாக, எம்.ஓ.டி.எஸ். அக்கவுன்ட் வைத்திருப்பவர்கள் ரூ. 1,000-ன் மடங்குகளாக பணத்தைஎடுத்துக் கொள்ளலாம். மீதம் உள்ள தொகை சேமிப்பு கணக்கில் வைப்புத் தொகையாக இருக்கும் என ஸ்டேட் வங்கி தெரிவித்துள்ளது.

ஸ்டேட் வங்கியின் பல்வாய்ப்பு டெபாசிட் திட்டம் குறித்த 5 தகவல்கள்

1.குறைந்தபட்ச பேலன்ஸ்: ஒவ்வொரு அக்கவுன்ட்டிலும் குறைந்தபட்ச பேலன்ஸ் ரூ. 1,000- ஆக இருக்க வேண்டும். அடுத்தடுத்த டெபாசிட் தொகைகள் ரூ. 1,000-ன் மடங்குகளாக இருக்க வேண்டும். இதற்கு உச்ச பட்ச தொகை என்று எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை.

2. கால அளவு: குறைந்தபட்ச கால அளவு ஓராண்டு என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த கணக்குகளுக்கு அதிகபட்ச கால அளவு 5 ஆண்டுகள்.

3. வட்டி விகிதம்: மற்ற திட்டங்களுக்கு என்ன வட்டி விகிதத்தை வழங்குகிறதோ அதே வட்டியை எம்.ஓ.டி.எஸ். திட்டத்திற்கும் ஸ்டேட் வங்கி வழங்குகிறது. கடந்த ஜூலை 30-ம் தேதியில் இருந்து வட்டி விகிதம் மாற்றப்பட்டுள்ளது. ரூ. 1 கோடிக்கு குறைவாக டெபாசிட் செய்யும் பணங்களுக்கு அளிக்கப்படும் வட்டி விகிதம் வருமாறு.

live-updates_v13-11-2018-3a

4. முன்முதிர்வு திரும்ப பெறுதல்: எம்.ஓ.டி.எஸ். வங்கி கணக்குகளுக்கு முன்முதிர்வு திரும்ப பெறுதல் பொருந்தும். ஆனால், வைப்புத் தொகை கணக்குகளுக்கு விதிகள் பொருந்தும் என ஸ்டேட் வங்கி தெரிவித்துள்ளது.

5. மற்ற பலன்கள் : பரிந்துரைத்தல், கடன் வசதி உள்ளிட்டவை இந்த கணக்கில் உள்ளது. ஆனால் இதற்கு ஒருவர் மாதந்தோறும் சராசரி பேலன்சை பராமரிக்க வேண்டும் என்ற விதி உள்ளது.

Courtesy : https://www.ndtv.com/business/tamil

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here