எஸ்பிஜி படையினருக்கு நன்றி தெரிவித்த ராகுல் காந்தி

0
173

என் குடும்பத்தின் பாதுகாப்பிற்காக அயராது உழைத்த சிறப்பு பாதுகாப்பு படையினருக்கு (SPG) நன்றிகள் என்று காங்கிரஸ் எம் பி  ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோருக்கு வழங்கப்பட்ட வந்து சிறப்பு பாதுகாப்பை மத்திய அரசு திரும்பப் பெற்றது. சிறப்பு பாதுகாப்பை (எஸ்.பி.ஜி) திரும்பப்பெற்று இசட் பிளஸ் பாதுகாப்பை அவர்களுக்கு அரசு வழங்குகிறது. எஸ்.பி.ஜி என்ற சிறப்பு பாதுகாப்பு குழு  பிரதமருக்கு பாதுகாப்பு அளித்து வருகிறது.

இந்நிலையில் ராகுல் காந்தி தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் ” சிறப்பு பாதுகாப்பில் பணியாற்றிய சகோதர சகோதரிகளுக்கு என் மிகப் பெரிய வணக்கங்கள். இத்தனை ஆண்டுகாலம் என்னையும் என் குடும்பத்தையும் பாதுகாத்ததற்கு நன்றிகள். உங்களுடன் நான் பயணித்ததில் அர்ப்பணிப்பு உணர்வை தெரிந்துகொண்டேன். உங்களுடனான பயணம் சந்தோஷமாகவும், உணர்வுப் பூர்வமாகவும் இருந்தது. உங்களுடைய எதிர்காலத்துக்கு என் வாழ்த்துகள்” என பதிவிட்டுள்ளார். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here