எஸ்பிஐ அனைத்து முக்கிய கடன்களுக்கும் வட்டி குறைப்பு

This is good news for SBI customers as home and auto loans will be now cheaper. Besides interest rates on loans, the top public lender in India has also slashed rates on fixed deposits.

0
289

எஸ்பிஐ அனைத்து முக்கிய கடன்களுக்கான வட்டி விகிதத்தினை குறைப்பதாக அறிவித்துள்ளது. அதோடு வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தையும் குறைத்துள்ளது. எஸ்பிஐ இந்த நிதியாண்டில் ஒன்பதாவது முறையாக வட்டி குறைப்பினை செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அரசின் நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ தற்போது வட்டி குறைப்பினை செய்துள்ளது. இந்த வட்டி குறைப்பானது சில கடன்களுக்கான வட்டி குறைப்பை செய்யும் என்றாலும், வங்கிகளில் வைத்திருக்கும் வைப்புத் தொகைகளுக்கும் வட்டி குறைப்பு செய்யப்பட்டுள்ளது. 

இந்த வட்டி விகிதமானது முந்தைய வட்டி விகிதமான 7.90 சதவீதத்திலிருந்து 7.85 சதவீதமாக குறைந்துள்ளது.  அதாவது 0.05 அடிப்படை புள்ளிகள் குறைக்கப்பட்டுள்ளது. இந்த வட்டி குறைப்பு என்பது வீடு மற்றும் வாகன கடன்களை வாங்குவதற்கு மலிவாக இருக்கும் என்பதால் இது எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு ஒரு நல்ல செய்தி இருக்கும் என நம்பலாம். 

தற்போது குறைக்கப்பட்டுள்ள 0.05 புதிய வட்டி விகிதமானது பிப்ரவரி 10 முதல் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. எஸ்பிஐ வட்டி விகித குறைப்பு அதன் வாடிக்கையாளர்களுக்கு பயனளிக்கும் அதே வேளையில், வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதங்கள் மேலும் குறையும் என்று தெரிகிறது. இதனால் மற்ற வங்கிகளும் வீடு மற்றும்  வாகனம் உள்ளிட்ட முக்கிய கடன்களுக்கான வட்டி விகிதம் குறையலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது சிறு வணிகங்களுக்கான கடன் விகிதங்களை மலிவாக மாற்றும். இது வங்கிகளுக்கு குறைந்த விகிதத்தில் பணத்தை திரட்டவும்,  பல்வேறு துறைகளுக்கு முக்கிய கடன் வழங்கும் நடவடிக்கைகளையும் அதிகரிக்க உதவும் என நம்பப்படுகிறது. 

எவ்வாறாயினும், ரிசர்வ் வங்கி அதன் ஆறாவது இரு மாத கொள்கை மதிப்பாய்வில் ரெப்போ விகிதத்தை மாற்றாமல் வைத்திருந்தது, ஆனால் கடனை அதிகரிப்பதற்கான சில நடவடிக்கைகளை அறிவித்தது, இது வட்டி விகிதங்களை மேலும் குறைக்க வழிவகுக்கும். இந்த வட்டி குறைப்பானது சில கடன்களுக்கான வட்டி விகிதங்களை குறைக்கும் என்றாலும், அதை ஈடுகட்டுவதற்காக வங்கி வைப்புத் தொகைக்கான  வட்டியை குறைத்துள்ளது. ஆனால் 7 நாட்கள் முதல் 45 நாட்கள் வரையிலான வைப்புத் தொகைக்கு மட்டும் வட்டி குறைப்பு செய்யப்படவில்லை. 

எஸ்பிஐயின் இந்த வட்டி விகித குறைப்பு மக்களிடையே பெறும் வரவேற்பை பெற்றுள்ளது. 

வைப்பு தொகைக்கான புதிய வட்டி விகிதம் பார்ப்போம்:  7 முத 45 நாட்கள் வரையிலான வைப்புத் தொகைக்கு  4.50 சதவீதமும்,  46 நாட்கள் முதல் 179 நாட்கள் வரையிலான வைப்புத் தொகைக்கு 5 சதவீதமும், 180 நாட்கள் முதல் 210 நாட்கள் வரையிலான வைப்புத் தொகைக்கு 5.50 சதவீதமும், 211 நாட்கள் முதல் 1 ஆண்டுக்கு குறைவான வைப்புத் தொகைக்கு 5.50 சதவீதமும்,  1 ஆண்டு முதல் 2 ஆண்டுக்கு  6 சதவீதமும், 2 ஆண்டு முதல் 3 ஆண்டுக்கு  6 சதவீதமும், 3 ஆண்டு முதல் 5 ஆண்டுக்கு 6 சதவீதமும், 5 ஆண்டு முதல் 10 ஆண்டுகளுக்கு  6 சதவீதம் வழங்கப்படும். 

இதேபோன்று மூத்த குடிமக்களுக்கான வட்டி விகிதமும் மாற்றப்பட்டுள்ளது. அதன்படி,  7 முதல் 45 நாட்கள் வரையிலான வைப்புத் தொகைக்கு 5 சதவீதமும், 46 நாட்கள் முதல் 179 நாட்களுக்கு 5.50 சதவீதமும், 180 நாட்கள் முதல் 210 நாட்களுக்கு 6 சதவீதமும், 211 நாட்கள் முதல் 1 ஆண்டுக்கும் குறைவான வைப்புத் தொகைக்கு 6 சதவீதமும்,  1 ஆண்டு முதல் 2 ஆண்டுக்கு 6.50 சதவீதமும்,  2 ஆண்டு முதல் 3 ஆண்டுகளுக்கு 6.50 சதவீதமும் , 3 ஆண்டு முதல் 5 ஆண்டுகளுக்கு 6.50 சதவீதமும்,  5 ஆண்டு முதல் 10 ஆண்டுகளுக்கு 6.50 சதவீதம் வழங்கப்படும். 

நன்றி : தினமணி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here