எஸ்டிஆர், நகுல்… நேற்று இல்லாத மாற்றம்

0
224


இரு நடிகர்களின் சமீபத்திய புகைப்படங்கள் ஆச்சரியத்தை ஏற்படுத்தின. ஒருவர் எஸ்டிஆர், இன்னொருவர் நகுல்.


அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்துக்காக வெயிட் போட்ட எஸ்டிஆர், அதன் பிறகு வெயிட்டை குறைக்கவில்லை (அல்லது குறைக்க முடியவில்லை). கடைசியாக வெளியான, வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தை விமர்சித்த யூடியூப் பிரபலம், கொஞ்சம் கவனமா படத்தை பாருங்க. படத்தில் யார் எஸ்டிஆர், யார் யோகி பாபுங்கிறது தெரியலை என்று கிண்டல் செய்திருந்தார். யோகி பாபு அளவுக்கு எஸ்டிஆரின் உடம்பு பெருத்துவிட்டது என்பதை இப்படி கூறியிருந்தார்.


வந்தா ராஜாவாதான் வருவேன் படம் முடிந்த பிறகு லண்டன் சென்ற எஸ்டிஆர், அங்கு தனது உடம்பை இளைக்க வைக்கும் பயிற்சியில் ஈடுபட்டார். தனது தம்பி குறளரசனின் திருமணத்தில் எஸ்டிஆர் எடுத்துக் கொண்ட புகைப்படங்களில் உடல் இளைத்த பழைய எஸ்டிஆரை பார்க்க முடிந்தது. இந்த சின்சியாரிட்டியை அவர் படம் நடிப்பதிலும் காட்டினால் அவரது ரசிகர்களும், திரையுலகும் மகிழ்ச்சியடையும்.
பாய்ஸ் படத்தில் அறிமுகமாகும் போது நகுல் குண்டாக இருந்தார்.

அவரது குண்டு உடம்புக்காகவே பாய்ஸ் படத்தில் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அதே உடம்புடன் நாயகனாக தொடர முடியாது என்பதை உணர்ந்தவர் உடல் இளைத்து, சில ஹிட் படங்களை கொடுத்தார். அதன் பிறகு நகுல் என்ற நடிகர் கொஞ்சம் கொஞ்சமாக திரையுலகிலிருந்து மறைந்து போனார். சமீபத்தில் அவர் தனது புகைப்படம் ஒன்றை இணையத்தில் வெளியிட்டார். அதில் நடிகர் பரத் போன்று, உடம்பை இரும்பாக்கி, வேறு வடிவத்துக்கு மாறியிருக்கிறார். இந்த கட்டுக்கோப்பான உடம்புக்காகவே அவருக்கு ஒன்றிரண்டு படங்களாவது கிடைக்கும், கிடைக்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here