எஸ்சி,எஸ்டி சட்டத்தின் தீர்ப்புக்கு தடைவிதிக்க முடியாது – உச்ச நீதிமன்றம் 

0
301

எஸ்சி,எஸ்டி சட்டத்தின் மீது வழங்கப்பட்ட தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய முடியாது, அதற்குத் தடைவிதிக்கவும் முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது

நாங்கள் அளித்த தீர்ப்பும், நீதிமன்றமும் அவர்களுக்கு எதிராகச் செயல்படுகிறவர்களை தண்டிக்கும் , தலித்சமூகத்தின் உரிமைகளைப் பாதுகாக்கும், என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

எஸ்சி, எஸ்டி சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது, உள்நோக்கத்துடன் சிலர் கைது செய்யப்படுகிறார்கள் அது குறித்து மறுபரிசீலனை செய்யக் கோரி வழக்கு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.

இந்த வழக்கில் 2018, மார்ச் 20-ஆம் தேதி நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். அதில் எஸ்சி,எஸ்டி சட்டத்தின் கீழ் ஒருவரை விசாரணையில்லாமல் கைது செய்யக்கூடாது, அரசு ஊழியர்களைக் கைது செய்ய வேண்டுமானால், மூத்த அதிகாரிகளிடம் முறைப்படி அனுமதி பெற்றுத்தான் கைது செய்ய வேண்டும் என்று தீர்ப்பளித்து இருந்தது.

இந்தத் தீர்ப்பை மறுபரிசீலனைச் செய்யக்கோரி ஏப்ரல் 3-ஆம் தேதி மத்தியஅரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனுத்ததாக்கல் செய்யப்பட்டது. ஆனால் தீர்ப்பை மறுஆய்வு செய்ய முடியாது என உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.

அதைத்தொடர்ந்து மத்திய அரசு மட்டுமல்லாமல், தமிழகம், கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் தரப்பிலும் சீராய்வு மனுத்தாக்கல் செய்யப்பட்டன. அந்தந்த மாநில அரசுகளின் சார்பில் எழுத்துப்பூர்வ கருத்துக்களும் தாக்கல் செய்யப்பட்டன.

மத்திய அரசு சார்பில் தலைமை வழக்கிறிஞர் கே.கே. வேணுகோபால் வாதிட்டார். அவர் எஸ்சி,எஸ்டிசட்டத்தின் மீது நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு தவறு. அதை திரும்பப் பெற வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

இந்த திருத்தப்பட்ட சட்டத்தால், தலித் பிரிவினருக்கு எதிரான வன்முறைகள் அதிகரிக்கும். சமீபத்தில் கூட வடமாநிலம் ஒன்றில், குதிரையில் வந்த தலித் மணப்பெண்ணையும், மணமகனையும் ஒரு கும்பல் தாக்கிய சம்பவம் நடந்துள்ளது. இந்த சட்டம் தலித்களுக்கு அளித்து வந்த அரசியலமைப்பு சட்டம் அளித்த பாதுகாப்பை நீர்த்துப்போகச் செய்யும் , என்றும் கூறினார்.

ஒரு அரசு ஊழியர் மீது புகார் கொடுத்தால் கூட அந்த ஊழியரின் உயர் அதிகாரியின் அனுமதி பெற்றுத்தான் கைது செய்ய வேண்டிய நிலை இருக்கிறது. இந்தத் தீர்ப்பை மறுபரிசீலனை செய்யவேண்டும் என்றும் வாதிட்டார்.

அதற்கு நீதிபதிகள் நாங்கள் அளித்த தீர்ப்பு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வதைத் தடுக்கவில்லை. குற்றம் செய்தது உறுதியானால், தண்டிக்கப்பட வேண்டும். அதற்காக ஒவ்வொரு புகாருக்கும் முதன்நிலைவிசாரணை என்பது கண்டிப்பாக செய்ய வேண்டியது இல்லை. இந்தத் தீர்ப்பு என்பது விசாரணையின்றி ஒருவர் உடனுக்குடன் கைது செய்வதற்கு எதிராக மட்டுமே இருக்கிறது. ஆதலால், தீர்ப்புக்குத் தடைவிதிக்க முடியாது. மேலும் இவ்வழக்கை அரசியல் சாசன அமர்வு விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்ததைத் தொடர்ந்து இவ்வழக்கினை மே 17- ஆம் தேதிக்கு ஒத்தி
வைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையும் படியுங்கள்: மக்களின் வரிப்பணம் 198 கோடி ரூபாய் வீண்; 580 கேள்விகளில் 17 கேள்விகளுக்கு மட்டுமே பதில்

இதையும் படியுங்கள்: உங்கள் ராணுவ வலிமையெல்லாம் வெறும் கண்காட்சிக்குத்தானா?

இதையும் படியுங்கள்: #BanSterlite: “மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தை மூடிட்டுப் போக வேண்டியதுதானே”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here