அரசு தேர்வுத்துறை நேற்று வெளியிட்ட எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு முடிவில் 94.5 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

அரசு தேர்வுத்துறை மாணவர்கள் பெற்ற மொத்த மதிப்பெண்களின் விவரத்தை வெளியிட்டுள்ளது .கடந்த ஆண்டைக் காட்டிலும் தேர்ச்சி வீதம் 0.1 சதவீதம் அதிகரித்துள்ளது.

9,402 பேர் 481-க்கும் மேல் மதிப்பெண்களையும், 56,837 பேர் 451 – 480 இடைப்பட்ட மதிப்பெண்களையும், 64,144 பேர் 426 – 450 இடைப்பட்ட மதிப்பெண்களையும் பெற்றுள்ளனர்.

இதேபோல், 76,413 பேர் 401 – 425 இடைப்பட்ட மதிப்பெண்களையும், 3,66,084 பேர் 301 – 400 இடைப்பட்ட மதிப்பெண்களையும் 3,12,587 பேர் 201 – 300 இடைப்பட்ட மதிப்பெண்களையும், 26,248 பேர் 176 – 200 இடைப்பட்ட மதிப்பெண்களையும் பெற்றனர். 38,682 பேர் 175 மதிப்பெண்களுக்குகீழ் வாங்கியுள்ளனர்.

தமிழகம், புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு 2018, மார்ச் 16 முதல் ஏப்ரல் 20-ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்தத் தேர்வை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 9,64,401 மாணவ, மாணவிகள் எழுதினர்.

2018 மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்வெழுத பதிவு செய்து, தேர்ச்சி பெறாதவர்களுக்கும், வருகை புரியாதவர்களுக்கும் ஜூன் 28-ஆம் தேதி முதல் சிறப்புத் துணைத் தேர்வு நடைபெறவுள்ளது என்றும் இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முறை குறித்து விரைவில் தனியாக அறிவிப்பு வெளியிடப்படும் என அரசு தேர்வுத் துறை இயக்ககம் தெரிவித்துள்ளது.