எழும்பூர் ரயில் நிலையம் உடபட் முக்கிய இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

0
157

சென்னை எழும்பூர் ரயில் நிலையம்,கோயம்பேடு பேருந்து நிலையம் மற்றும் விமான நிலையம் ஆகியவற்றுக்கு விடப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது குறித்து காவல்துறையினர் தரப்பில் கூறப்பட்டதாவது:

சென்னை எழும்பூரில் உள்ள பழைய காவல் ஆணையர் அலுவலகத்தில் மாநில காவல் கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருகிறது. இந்த கட்டுப்பாட்டு அறை தொலைபேசிக்கு இன்று(வியாழக்கிழமை) மாலை 4.40 மணி அளவில் ஒரு அழைப்பு வந்தது.

அந்த அழைப்பில் பேசிய பெண், ‘சென்னை விமான நிலையம், எழும்பூர் ரயில் நிலையம் மற்றும் கோயம்பேடு பேருந்து நிலையம் ஆகிய மூன்று இடங்களுக்கும் வெடிகுண்டு வைத்துள்ளேன். அது சற்று நேரத்தில் வெடித்து சிதறும். முடிந்தால் தடுத்துப் பாருங்கள்’ என்று கூறி இணைப்பை துண்டித்ததாக கூறப்படுகிறது.

இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீஸார், காவல்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். இதைத் தொடர்ந்து 3 இடங்களுக்கும் வெடிகுண்டுகளை கண்டறிந்து அப்புறப்படுத்தும் வெடிகுண்டு நிபுணர்கள் விரைந்தனர். அங்கு போலீஸார் மெட்டல் டிடெக்டர், மோப்ப நாய் உதவிடன் பல மணி நேரம் சோதனை செய்தனர்.

இச் சோதனையில் அங்கிருந்து எந்த வெடிபொருளும் கண்டெடுக்கப்படவில்லை. இதனால் வதந்தியை பரப்பும் நோக்கத்துடன் அந்த அழைப்பு வந்திருப்பது தெரியவந்தது.

(இந்தக் கட்டுரை பல்வேறு தரவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது.)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here