பிரபல எழுத்தாளர் ஞாநி சங்கரன் (64) உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் காலமானார். கடந்த சில மாதங்களாக உடல்நலக் குறைவால் அவர் பாதிக்கப்பட்டிருந்தார். அதற்கான சிகிச்சையும் அவர் மேற்கொண்டுவந்தார். இந்நிலையில், திங்கட்கிழமை (இன்று) அதிகாலை அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து அவரது உயிர் பிரிந்தது. ஞாநியின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக சென்னை கே.கே.நகரிலுள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்: “கப்பல் படையில் மீனவர்களைச் சேருங்கள்”

1954இல் செங்கல்பட்டில் பிறந்த ஞாநியின் இயற்பெயர் சங்கரன். தமிழகத்தின் முன்னணி பத்திரிகைகளில் பணியாற்றியுள்ளார். பழைய பேப்பர், மறுபடியும், கண்டதைச் சொல்லுகிறேன், கேள்விகள், ஓ பக்கங்கள் என பல கட்டுரைகளையும் அவர் எழுதியுள்ளார்.