”மக்கள் அரசாங்கத்துக்கு அஞ்சினால் அது கொடுங்கோலாட்சி;
அரசாங்கம் மக்களுக்குப் பயந்தால் அது சுதந்திரம்”
என்றார் சிந்தனையாளர் ஜான் பாஸில் பார்ன்ஹில்.
மத்திய மோடி அரசால் அடிமைப்படுத்தப்பட்டு தனது அடையாளத்தைத் தக்க வைப்பதற்கு படாத பாடுபட்டு வருகிற எடப்பாடி பழனிசாமி அரசாங்கம் இன்னொரு மெரினா புரட்சிக்கு அஞ்சி, சென்னைப் பெருநகரத்தின் ஒரே இளைப்பாறுதலான மெரினா, பெசன்ட் நகர் கடற்கரைகளுக்கு மக்கள் செல்வதைத் தடை செய்திருக்கிறது; ஞாயிற்றுக் கிழமையன்று (ஏப்ரல் 1, 2018) கொடுமையான வெயிலிலிருந்து தப்பிப்பதற்காகவும் உயிர்த்தெழுதலின் (ஈஸ்டர்) திருவிழாக் கொண்டாட்டத்துக்குப் பிறகும் கடற்கரைகளுக்கு வந்த மக்கள் காவல் துறையினரால் திருப்பி அனுப்பப்பட்டார்கள்.
சமூக நீதியில் 100 வருஷங்கள் முந்தியிருக்கிற தமிழ்நாடு, தனது அரசியல் தலைமையைச் சுயமாக உருவாக்குகிற சுயமரியாதைக்காக டெல்லி ஆட்சியாளர்களால் தொடர்ந்து தண்டிக்கப்பட்டு வருகிறது; காவிரி நதி நீர் உரிமை மறுப்பு என்பது அதில் ஓர் அம்சம். இன்னொரு புறம், வேதாந்தா குழுமத்தின் ஸ்டெர்லைட் தாமிர ஊருக்கு ஆலை விரிவாக்கத்துக்கு எதிராக போராடும் சாதாரண மக்களை உதாசீனம் செய்கிறது தமிழ்நாடு அரசு.
அறிவோடும் அறத்தோடும் தமிழக மக்கள் மெல்லக் கிளர்ந்தெழுகிறார்கள். தன்னாட்சிக்கான இந்தப் பயணத்தை அடைகாப்போம்; வளர்த்தெடுப்போம். இந்த அறப்போரால் நமது குழந்தைகள் சுதந்திரமான சுயராஜ்ஜியத்தைக் காண்பார்கள்.
Help people #OvercomeOckhi