எளிதாக்கப்பட்ட பாஸ்போர்ட் விதிமுறைகள்

0
517

பாஸ்போர்ட் பெறுதில் சில விதிமுறைகளை மத்திய அரசு தளர்த்தியுள்ளது. பாஸ்போர்ட் பெற்ற பின்னர் காவல்துறையினர் விசாரணை அறிக்கையை அளிக்கும் வகையில் விதிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் டுவிட்டரில், ’பாஸ்போர்ட் பெறுவதற்கு ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, பான் கார்டு மற்றும் பிரமாணப் பத்திரம் இவற்றை தாக்கல் செய்தால், பாஸ்போர்ட் விரைவில் வழங்கப்பட்டுவிடும். பாஸ்போர்ட் வழங்கிய பின்னர் காவல்துறையினர் விசாரணை நடத்தி தகவல் பெறப்படும்” என பதிவிட்டுள்ளார்.

passport-tweet

இதற்கு முன்னர், காவல்துறையினர் 49 நாட்களில் விசாணை நடத்தி பாஸ்போர்ட் பெறுபவர் குறித்த அறிக்கையை மத்திய அரசுக்கு அளித்துவந்தனர். பின்னர் 2014ஆம் ஆண்டில் 42 நாட்களாகவும், 2015ஆம் ஆண்டில் 34 நாட்களாகவும், தற்போது 21 நாட்களாக மத்திய அரசு குறைத்துள்ளது.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்