தென் கொரியாவில் எல்.ஜி. நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் ஆன எல்.ஜி க்யூ9 அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.

DweX4gVVYAEBy96

அண்ட்ராய்டு 8.1 ஓரியோவில் இயங்கும் இந்த ஸ்மார்ட்போன் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி மெமரியுடன் வெளிவருகிறது.

19:5:9 டிஸ்பிளே பேனலும், குயால்கோம் ஸ்னாப்டிராகன் 821 எஸ்.ஓ.சி மற்றும் 16 மெகா பிக்சல் கேமராவுடன் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமாகியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் பூம்பாக்ஸ் ஸ்பீக்கரூடன் விற்பனை செய்யப்படுகிறது. சுமார் 3,000mAh பேட்டரியும் இணைக்கப்பட்டுள்ளது.

மேலும் வரும் ஜூலை 11ஆம் தேதி முதல் விற்பனைக்கு வரவிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் கார்மையின் ரெட், அரோரா பிளாக் மற்றும் மொராக்கன் புளு போன்ற நிறங்களில் கிடைக்கும்.

மேலும் இந்தியாவில் எப்போது வெளியாகும் என்று இன்னும் அறிவிக்கப்படவில்லை.

எல்.ஜி க்யூ9 ஸ்மார்ட்போன் இந்தியாவில் ரூ.31,000-க்கு விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்