ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

2018ஆம் ஆண்டு இன்றுடன் நிறைவுபெற்று, நள்ளிரவில் 2019ஆம் ஆண்டு பிறக்கிறது. இதை முன்னிட்டு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும்; இங்கே இல்லாமை இல்லாத நிலை வேண்டும் என்பதே அரசின் குறிக்கோள் எனக் கூறியுள்ளார்.

வளமும், வலிமையும் மிக்க தமிழ்நாட்டை படைத்திடவும், தொடர்ந்து முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்லவும் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட, இப்புத்தாண்டில் உறுதியேற்க வேண்டும் என வலியுறுத்தியுள்ள அவர், மக்களுக்கு புதிய எழுச்சியையும், வளர்ச்சியையும் வழங்கும் ஆண்டாக மலரட்டும் என வாழ்த்தியுள்ளார். 

அதிமுக சார்பில் வெளியிடப்பட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், தமிழக மக்கள் அனைவருக்கும் இந்த புத்தாண்டு புதிய நம்பிக்கையையும், எழுச்சியையும், மலர்ச்சியையும், வளர்ச்சியையும் வழங்கும் ஆண்டாக மலரட்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here